Home /News /tamil-nadu /

மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் ஆதரவு!

திருமாவளவன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்

திருமாவளவன் மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித்

Lok Sabha Election 2019 | திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளனர்.

  • News18
  • Last Updated :
சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில்  தொல்.திருமாவளவன் வெற்றிப் பெற வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித்  ஆதரவு தெரிவித்துள்ளர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதியன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். இதில் சிதம்பரம் தனித் தொகுதியில் போட்டியிட உள்ள அக்கட்சியின் தலைவர் தொ.திருமாவளவனை நேரில் சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Lok Sabha Key Constituency, Pa. ranjith

அடுத்த செய்தி