ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இயக்குநர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி..!

இயக்குநர் பா. ரஞ்சித்தின் அண்ணன் ஒன்றிய கவுன்சிலராக வெற்றி..!

பா.ரஞ்சித் அண்ணன் பிரபு

பா.ரஞ்சித் அண்ணன் பிரபு

255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வில்லிவாக்கம் ஒன்றியக் கவுன்சிலராகியுள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தின் அண்ணன் பிரபு வில்லிவாக்கம் ஒன்றியக் கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

கார்லபாக்கம், பாலவேடு, வேளச்சேரி, ஆலத்தூர் என வில்லிவாக்கம் ஒன்றியம் 1 வது வார்ட்டில் மொத்தம் 10,654 வாக்குகள் உள்ளன. இதில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட ரஞ்சித்தின் அண்ணன் பிரபு 3846 வாக்குகளும், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இளம்பருதி 3591 வாக்குகளும் பெற்றார். அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் ராமமூர்த்தி 2555 வாக்குகளும் பெற்றார்.

இந்நிலையில் பிரபு 255 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று வில்லிவாக்கம் ஒன்றியக் கவுன்சிலராகியுள்ளார்.

பா.ரஞ்சித் சினிமை மட்டுமல்லாது பொது நிகழ்ச்சிகளிலும் அரசியல் பேசக் கூடியவர். இந்நிலையில் அவரது அண்ணன் தற்போது அரசியலில் களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

First published:

Tags: Local Body Election 2019, Pa. ranjith