ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Pavithra lakshmi: புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

Pavithra lakshmi: புதிய படத்தில் பவித்ரா லக்ஷ்மி! பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குநர்

இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகை பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவித்ராவின் பிறந்தநாள் சர்பிரைஸாக கொடுத்துள்ளார்.

இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகை பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவித்ராவின் பிறந்தநாள் சர்பிரைஸாக கொடுத்துள்ளார்.

இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகை பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவித்ராவின் பிறந்தநாள் சர்பிரைஸாக கொடுத்துள்ளார்.

 • 2 minute read
 • Last Updated :

  இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் படத்தில் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டான குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட பவித்ரா ஜூன் 16 ஆம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரும் பலரும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பவித்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர். நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்து இந்த பிறந்நாளுக்கு அவருக்கு பல சர்ப்ரைஸ்களும் கிடைத்தது.


  அந்தவகையில், இயக்குநர் கார்த்திகேயன் வேலப்பன் இயக்கும் புதிய படத்தில் நடிகை பவித்ரா லக்ஷ்மி நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பவித்ராவின் பிறந்தநாள் சர்பிரைஸாக கொடுத்துள்ளார்.

  Also Read:  தன்னை விமர்சித்த நெட்டிசன்களுக்கு நாசூக்காக பதிலடி கொடுத்த பிக்பாஸ் அர்ச்சனாவின் மகள்!

  இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவித்ராவை வாழ்த்தியுள்ள பதிவில், ஹேப்பி பர்த் டே பவித்ரா லக்ஷ்மி, உங்களுடைய கனவுகள் அனைத்தும் நிறைவேற என்னுடைய வாழ்த்துக்கள். விமானிகள் சார்ந்து நான் எடுக்க இருக்கும் திரைப்படத்தில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

  நடிகை பவித்ரா லக்‌ஷ்மி

  ஏற்கனவே பிறந்த நாள் வாழ்த்துகளில் மகிழ்ச்சியில் இருந்த பவித்ராவுக்கு, கார்த்திக் வேலப்பன் கொடுத்த சர்பிரைஸ் மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு சென்றுள்ளது. அவருடைய நாளை மேலும் மகிழ்ச்சியானதாக மாற்றியுள்ளது. இதற்கு பதில் கொடுத்துள்ள பவித்ரா, பிறந்தநாள் வாழ்த்து கூறிய கார்த்திக் வேலப்பனுக்கு மனதார நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இன்றைய நாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்கும், உங்களுடைய திரைப்படத்தில் நடிக்க இருப்பதை தெரிவித்ததையும் எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் எனக் கூறியுள்ளார்.


  2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான உல்லாசம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு காலடி எடுத்து வைத்தார் பவித்ரா. அதன்பிறகு குக் வித் கோமாளி ஷோவில் கலந்து கொண்ட அவர், தமிழக மக்களிடையேயும் நல்ல அறிமுகத்தை பெற்றார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், மற்றொரு புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. சதீஷ் நாயகனாக நடிக்கும் அந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக பவித்ரா நடிக்க உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, தன்னுடைய பிறந்தநாளை குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்டோருடன் வீட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடிய பவித்ரா, இன்ஸ்டாகிராமிலும் லைவ் வந்து ரசிகர்களுக்கு சர்பிரைஸ் கொடுத்தார். பவித்ராவுக்கு என்ன கிப்ட் கொண்டு வந்திருக்கிறீர்கள் என புகழிடம் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த அவர், பொருள் ஒன்றை கொடுப்பதைவிட எப்போதும் நல்ல நண்பர்களாக ஒன்றாக இருப்போம், அதுவே பிறந்த நாளுக்கான கிப்ட் என தெரிவித்தார்.

  First published: