Home /News /tamil-nadu /

தமிழக அரசு தொடர்ந்து மக்கள்விரோதப் போக்கில் ஈடுபட்டால் போராட்டம் - இயக்குநர் கெளதமன்

தமிழக அரசு தொடர்ந்து மக்கள்விரோதப் போக்கில் ஈடுபட்டால் போராட்டம் - இயக்குநர் கெளதமன்

இயக்குநர் கவுதமன்

இயக்குநர் கவுதமன்

  • 2 minute read
  • Last Updated :
    தமிழக அரசு தொடர்ந்து மக்களுக்கு எதிரான மக்கள்விரோதப் போக்கில் ஈடுபட்டால், அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுவோம் என்று திரைப்பட இயக்குநர் கௌதமன் பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.

    திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் தலைவருமான கௌதமன் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு, தங்கள் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிம்போது, ‘‘தமிழகம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவருகிறது. மனிதர்கள் மட்டுமின்றி ஆடுமாடுகள் மற்றும் வனவிலங்குகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றன. தமிழக அரசு இதனைப் பற்றி கவலைப்படாமல் நாடகம் போடுவதிலேயே குறியாக உள்ளது.

    ஒற்றைத் தலைமையில் என்ற திசை திருப்பும் நாடகம் தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் மூலமாக அரங்கேற்றி, அதற்கு கூட்டம் நடத்துவது போல தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் படியான நாடகத்தை ஏன் நடத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்தில் காவரி தண்ணீர் திறக்கப்படாததால், தஞ்சை டெல்டா மாவட்ட விவசாயிகளின் குருவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.

    காவரி மேலாண்மை ஆணையம் அமைய நாங்கள் தான் காரணம் என்று கூறிக்கொள்ளும் தமிழக அரசு, அந்த ஆணையத்தின் உத்தரவுப்படி நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத்தர எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் இருப்பது ஏன்?

    ஹைட்ரோகார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் அதற்காக போராடும் விவசாயிகளை அடக்கும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நீட் தேர்வினால் மாணவர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்கு தமிழக அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படியே தமிழக விவசாயிகள், மாணவர்கள் மற்றும் மீனவர்கள் அழிக்கப்படுகின்ற நிலையில், தமிழகத்தில் நடப்பது மக்கள் ஆட்சி அல்ல.

    இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கை இனி நாங்கள் வேடிக்கை பார்க்கமாட்டோம். சகித்துக்கொண்டு இருக்கமாட்டோம். இதற்கு ஓரு முடிவு கட்டுவோம். பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று பார்வையிட்டோம். இந்த மாவட்டம் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. சிமெண்ட் ஆலைகளுக்காக தோண்டப்பட்ட குவாரிகள் மூடப்படமால் மரணக் குழிகளாக உள்ளன.

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் செயல்பாடாத நிர்வாகமாக லஞ்சத்தில் திளைத்துள்ளது. கொள்ளையடிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள இருப்புப்பாதைத் திட்டம், சிறப்பு பொருளாதாரமண்டலம், அரசு மருத்துவக்கல்லூரி, சின்ன வெங்காய விவசாயிகளின் மேம்பாடு போன்ற கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை உடனே செயல்படுத்த வேண்டும்’’ என்றார் கெளதமன்.

    மேலும் பார்க்க...

    Published by:Ilavarasan M
    First published:

    Tags: Director Gowthaman

    அடுத்த செய்தி