முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியது இது தான் - இயக்குநர் சேரன்

வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியது இது தான் - இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

இயக்குநர் சேரன்

இயக்குநரும் நடிகருமான சேரன் வாக்களாளர்கள் சிந்திக்க வேண்டியவை குறித்து தனது ட்விட்டரில் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக ஆகிய இருபெரும் கட்சிகள் மக்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வாக்குகளை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளது.

தொலைக்காட்சி தொடங்கி இணையம், சமூக ஊடகம் உள்ளிட்டவற்றிலும் நேரடியாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த 1 மாத காலமாக பிரசாரம் செய்து வந்த நிலையில் அவை அனைத்தும் இன்று மாலை 7 மணியுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில் அனைத்து அரசியல் கட்சியின் அறிவிப்புகள், தலைவர்களின் பிரசாரத்தை வாக்காளர்கள் நேரடியாக பார்த்திருந்தாலும் எவற்றையெல்லாம் சிந்தித்து வாக்கு செலுத்த வேண்டும் என்பது குறித்து இயக்குநரும் நடிகருமான சேரன் தனது ட்விட்டர் பதிவில் எழுதியுள்ளார்.

அந்த பதிவில் இயக்குநர் சேரன் தெரிவித்திருப்பதாவது, “6ம் தேதி எலெக்‌ஷன்.. ஓட்டுப்போடுவது உங்கள் கடமை.. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் போடலாம். யார் பேச்சிற்கும் யாரோட அனுதாபியாகவும் இருந்து சிந்திக்கவேண்டாம்..இது உங்களுக்கான உரிமை, உங்கள் வாழ்வில் எதிர்காலத்தில் எது தேவையோ.. நம் சந்ததிகளின் வாழ்க்கை நலம்பெற எது சமூக மாற்றமாகனும்னு நினைக்கிறீர்களோ.. அதற்கான செயல்பாட்டு திட்டமும் சிந்தனையும் யாரிடம் உள்ளதோ அவர்களை தேர்ந்தெடுத்து ஓட்டுப்போடுங்கள்.. இது எக்ஸ்ட்ரா இருக்க வீட்டை வாடகைக்கு விடும் விசயம் அல்ல... இருக்கும் நம் வீட்டுக்குள் குடும்பத்தலைமயை ஒருவரிடம் ஒப்படைப்பது போல..

ஆகையால் ஒரு ஒரு மணி நேரம் குடும்பத்தாருடன் அமர்ந்து பேசுங்கள்.. அவரவர் சார்ந்த துறைகளில் எதில் வளர்ச்சி சிக்கல் இருக்கிறது.. ஏன் தீர்க்கப்படவில்லை.. என்ன செய்தால் அது மாறும், யாரிடம் சரியான சிந்தனை இருக்கிறது என கலந்து பேசுங்கள்.. இலவசமாக கிடைக்கவேண்டியது கல்வியும்,மருத்துவமும் என்பதை நினைவுகொள்ளுங்கள்.

உழைக்கவும், உடலையும் வாழ்வையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிந்திப்பவர்கள் மட்டுமே நம் உண்மையான எதிர்காலம் பற்றி யோசிக்கிறார்கள் என அர்த்தம்.. இது வாக்களிக்கும் அனைவரும் சிந்திக்க வேண்டியதே... நான் எந்த கட்சி சார்ந்தும் பேசவில்லை.. நாம்தான் ஆளவேண்டும். வாக்களிக்க மறக்காதீர்கள்.” இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Director cheran, TN Assembly Election 2021