ஐ.பி.எல் போட்டியை ஒத்திவையுங்கள்; மீறினால் விளையாட்டாக இருக்காது - பாரதிராஜா

news18
Updated: April 5, 2018, 12:18 PM IST
ஐ.பி.எல் போட்டியை ஒத்திவையுங்கள்; மீறினால் விளையாட்டாக இருக்காது - பாரதிராஜா
பாரதிராஜா - இயக்குநர்
news18
Updated: April 5, 2018, 12:18 PM IST
ஐ.பி. எல் போட்டிகளை ஒத்திவையுங்கள் மீறி நடந்தால் அது ஐ.பி.எல் விளையாட்டாக இருக்காது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக்குழு மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் ஆகியோர் வரும் ஏப்ரல் 10-ம் தேதி மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை நடத்த திட்டமிட்டிருந்தனர். மேலும் தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை நடத்தினால் வீரர்களை சிறை பிடிப்போம் என சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “ ஐ.பி.எல் எனும் மாய உலகத்திற்கு நம்மை அடிமைப்படுத்தி நம்முடைய தேசியப் புரட்சிக்கு தீ வைக்கும் முட்டாள்த்தனமான விளையாட்டை நிராகரிப்போம், தமிழா ஐ.பி.எல் என்னும் கிரிக்கெட்டை நிராகரி, நிறைய வேண்டியது மைதானத்தின் இருக்கைகள் அல்ல. புரட்சியின் மைதானம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், ஐ.பி.எல் விளையாட்டை விளையாட வேண்டாம் என்று சொல்லவில்லை. விளையாட்டை கொஞ்சம் ஒத்தி வையுங்கள் மீறி நடந்தால் அது ஐ.பி.எல் விளையாட்டாக இருக்காது என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில் திட்டமிட்டபடி ஐ.பி.எல் போட்டி நடைபெறும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
First published: April 4, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்