• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'ஒட்டுமொத்த சமூகத்தையும் ஜெய்பீம் புரட்டிப் போட்டுள்ளது' : அமீர் பாராட்டு

'ஒட்டுமொத்த சமூகத்தையும் ஜெய்பீம் புரட்டிப் போட்டுள்ளது' : அமீர் பாராட்டு

நூற்றுக்கணக்கானோரை திரையரங்குக்கு அழைத்து படத்தை காண்பிக்கிறோம். அதே நேரம் ஓடிடியில் ஆயிரம் பேர், லட்சம் பேர் இருக்கிற வீட்டிற்கே சென்று படத்தை சேர்க்கிறோம். இது ஒரு வரம்தான். : அமீர்

  • Share this:
    ஒட்டுமொத்த சமூகத்தையும் புரட்டிப் போட்ட படமாக ஜெய்பீம் அமைந்துள்ளது என்று இயக்குனர் அமீர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஒரு காட்சியில், அக்னிச் சட்டி படத்துடன் கூடிய காலண்டர் இடம்பெற்றிருந்தது. அது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போல் உள்ளதாக கூறி, பாமக, வன்னியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து அந்தக் காட்சி நீக்கப்பட்டது.

    மேலும் வன்னியர்களின் மனதை சூர்யா புண்படுத்தி விட்டதாக கூறி, நஷ்ட ஈடாக ரூ. 5 கோடியை ஜெய்பீம் தயாரிப்பு நிர்வாகம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ஜெய்பீம் படத்திற்கு மத்திய மாநில அரசுகள் விருது வழங்கி அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரைப்பட விழா ஒன்றில் பேசிய இயக்குனர் அமீர் ஜெய்பீம் படத்தை பாராட்டியுள்ளார். விழாவில் அவர் பேசியதாவது-

    ஓடிடியில் ரிலீஸ் செய்தால் படம் மக்களை சென்று சேராது என்பது உண்மையல்ல. ஓடிடியில் வெளியான ஜெய்பீம்தான் ஒட்டுமொத்த சமூகத்தையும் புரட்டிப் போட்ட படமாக இருக்கிறது. நூற்றுக்கணக்கானோரை திரையரங்குக்கு அழைத்து படத்தை காண்பிக்கிறோம். அதே நேரம் ஓடிடியில் ஆயிரம் பேர், லட்சம் பேர் இருக்கிற வீட்டிற்கே சென்று படத்தை சேர்க்கிறோம். இது ஒரு வரம்தான். ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என பல்வேறு செய்திகள் வந்துள்ளன. அது ஒரு அருமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: