முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த இயக்குனர் நவீன்

ஆம்பளையா இருக்குறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு? - எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த இயக்குனர் நவீன்

எடப்பாடி பழனிசாமி - இயக்குனர் நவீன்

எடப்பாடி பழனிசாமி - இயக்குனர் நவீன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பரப்புரையை விமர்சித்து இயக்குனர் நவீன் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சார களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் 27ஆம் தேதி நடைபெறும் இந்த இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் நேரத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் வாக்காளர்களை திமுகவினரை அடைத்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டினார். அப்போது ‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறினார். இந்த கருத்து நேற்று முதல் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் நவீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், ‘ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நவீன் பல நேரங்களில் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் சமூக பிரச்சனைகள் குறித்தும் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் முன்வைத்து வருகிறார். இந்நிலையில் இவர் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்துள்ளார்.

First published:

Tags: Director Naveen, Edappadi Palaniswami, Erode Bypoll, Erode East Constituency