Home /News /tamil-nadu /

திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி: பாஜக பிரமுகர் மீது குற்றச்சாட்டு

திருமணத்துக்கு கட்டாயப்படுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி: பாஜக பிரமுகர் மீது குற்றச்சாட்டு

பாஜக பிரமுகர் மீது புகார்

பாஜக பிரமுகர் மீது புகார்

கணவனை இழந்த பெண்ணை பாஜக நிர்வாகி திருமணத்துகு கட்டாயப்படுத்தியதாகவும் அவரது மிரட்டலுக்கு பயந்து அப்பெண் விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.

    திண்டுக்கல்லில் கணவரை இழந்த இளம் பெண்ணை கட்டாய திருமணத்து பாஜகவை சேர்ந்த பிரமுகர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பெண் மனமடைந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    திண்டுக்கல் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரை சேர்ந்தவர் மனிஷா (25). சட்டம் பயின்றவர்.  இவரது கணவர் குமரேசன். இவருக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். கணவர் குமரேசன் கடந்த 2018 ல் படுகொலை செய்யப்பட்டார். மனிஷா தனது தாய் மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார் இந்நிலையில் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் தான் குமரேசனின் சகோதரர் என கூறி அடிக்கடி மனிஷா  வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

    பின்னர் தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு மனிஷாவை  கடந்த இரண்டு ஆண்டுகளாக தினேஷ் குமார் தொந்தரவு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் தனது கட்சி பலத்தை பயன்படுத்தி காவல் நிலையத்தில் அந்த குடும்பத்தினர் மீது  பொய் புகார் அளித்து அவர் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதையும் படிங்க: புதுவித வெள்ளை ஈ தாக்குதலால் 2,000 தென்னை மரங்கள் பாதிப்பு... கவலையில் விவசாயிகள்


    இதனால் மனமுடைந்த மனிஷா விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டில் மயங்கி கிடந்த மனிஷாவை  மீட்டு உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்பொழுது  மனிஷாவுக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கட்டாய திருமணம் மற்றும் தங்கள் மீது பொய் புகார் கொடுத்து மிரட்டல் விடுத்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி தெரிவித்துள்ளார்.

    மன அழுத்தம் ஏற்பட்டாலோதற்கொலை எண்ணம் உண்டானாலோஅதனை மாற்றகீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

    மாநில உதவி மையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
    Published by:Murugesh M
    First published:

    Tags: BJP cadre, Suicide attempt

    அடுத்த செய்தி