கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை" - லியோனி

ஐ.லியோனி

ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று 2011ம் ஆண்டு கீழே வைத்த பாட புத்தகத்தை 10 ஆண்டுகள் கழித்து 2021ல் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக திண்டுக்கல் ஐ லியோனி தெரிவித்தார்.

 • Share this:
  தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, பாடப்புத்தகங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பாடநூல் கழகத்தின் தலைவராக பதவியேற்றுள்ள  லியோனி தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டார்.  சட்டமன்ற தேர்தலின்போது பெண்கள் குறித்து  அவர் பேசிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே லியோனியின் நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  இந்நிலையில், தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக  லியோனி இன்று பதவியேற்றுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

  மேலும் படிக்க: மேகதாது அணை: தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பதாக அனைத்துக் கட்சிகளும் உறுதி!


  பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த லியோனி,  ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று 2011ம் ஆண்டு கீழே வைத்த பாட புத்தகத்தை 10 ஆண்டுகள் கழித்து 2021ல் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.  பாடநூல்களை மாணவர்கள், விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவதே தனது நோக்க என்று லியோனி தெரிவித்தார்.

  இதையும் படிங்க: தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையக்கப்படுத்தும் பணி நடக்கிறது: கனிமொழி தகவல்...


  தான் மாணவராக இருந்த காலக்கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சு பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட லியோனி, ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

   
  Published by:Murugesh M
  First published: