திண்டுக்கலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு! 11-ம் வகுப்பு மாணவர் கைது

திண்டுக்கலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு! 11-ம் வகுப்பு மாணவர் கைது
மாதிரிப்படம்
  • Share this:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்று மாலை இயற்கை உபாதை கழிக்கச் சென்று விட்டு வீடு திரும்பவில்லை. பெற்றோர் தேடியபோது டிராக்டர் ஒன்றில் பலத்த காயங்களுடன் அவரது சடலம் கிடைத்தது. வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்தவர்கள் அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்தவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. உடலில் காயங்கள் இருந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறிய உறவினர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பின்பு அந்தச் சிறுமியை 11-ம் வகுப்பு மாணவரின் சகோதரர் விளையாட்டாக டிராக்டரில் ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது சிறுமி தவறி விழுந்து இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனால் சிறுவனான மாணவரின் சகோதரரும், டிராக்டர் உரிமையாளர் உமா சேகரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Also see:

 
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்