பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நான் பேசினேன் என்று அன்புமணி கூறுவது தவறு - திண்டுக்கல் லியோனி விளக்கம்

Youtube Video

பெண்களை இழிவுபடுத்தும் விதமாக தான் பேசியதாக அன்புமணி கூறுவது தவறு என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பதவி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

  மேலும், சமசீர் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களில்  ஒன்றிய அரசு என அச்சிடப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அன்புமணி கருத்திற்கு பதிலளித்த அவர், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக கூறியதற்கு தான் பல முறை கருத்து கூறியுள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சரையும் அன்புமணி ராமதாஸ் இழிவாக பேசியுள்ளதாகவும், அதை ஒப்பிடுகையில் இந்த கருத்து பெரியது அல்ல என்றும், அவரின் கருத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: