திண்டுக்கலில் 8 முக்கியப் பதவிகளை அலங்கரிக்கும் பெண் ஆளுமைகள்

ஆட்சியர், நீதிபதி, எஸ்பி என திண்டுக்கல் மாவட்டத்தின் 8 முக்கிய உயர் பதவிகளை பெண்கள் அலங்கரித்து வருகின்றனர்.

  • Share this:
"ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று
எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற


விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்"

பாரதியாரின் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிர் ஊட்டும் வகையில் தமிழ்நாட்டிற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது திண்டுக்கல் மாவட்டம். ஆட்சியராக விஜயலட்சுமி செயலாற்றி வருகிறார். முதன்மை நீதிபதியாக ஜமுனாவும், காவல்துறை எஸ்பியாக ரவளிப்பிரியாவும், வனத்துறை அதிகாரியாக வித்யாவும் உள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலராக உஷா, திட்ட அலுவலராக கவிதா என திண்டுக்கல் மாவட்டத்தில் 8 முக்கிய பதவிகளிலும் பெண் அலுவலர்களே உள்ளனர்.

Also read: பொறியியல் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்போது?இதுதவிர திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 11 ஊராட்சி ஒன்றிய தலைவர்களாக பெண்களே உள்ளனர். 33 சதவிகித இட ஒதுக்கீடு கேட்டு பெண்கள் போராடி வந்த சூழலில், முக்கிய பதவிகள் அனைத்தையும் பெண்களுக்கே கொடுத்து மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது திண்டுக்கல்!

பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் சூழலில், திண்டுக்கல் நிர்வாகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு இருப்பது மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading