ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம், திமுக நட்சத்திர வேட்பாளரான டி.ஆர்.பாலுவை எதிர்கொள்கிறார். திண்டுக்கல் தொகுதியில், ஜோதிமுத்து திமுக வேட்பாளர் வேலுச்சாமியுடன் மோதுகிறார்.
அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.கவின் 5 வேட்பாளர்களின் பெயரை நேற்றே அறிவித்துவிட்ட நிலையில், எஞ்சியிருந்த 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.கவிற்கு 7 மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களவையில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டது. இதில் தருமபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், மத்திய சென்னை ஆகிய 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர்.
இன்று திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ம.க தலைமை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் அக்கட்சியின் துணைத் தலைவர் வைத்திலிங்கமும், திண்டுக்கல் தொகுதியில் பா.ம.க துணைப் பொதுச்செயலாளர் ஜோதிமுத்துவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம், தி.மு.க நட்சத்திர வேட்பாளரான டி.ஆர்.பாலுவை எதிர்கொள்கிறார். திண்டுக்கல் தொகுதியில், ஜோதிமுத்து தி.மு.க வேட்பாளர் வேலுச்சாமியுடன் மோதுகிறார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.