ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சு வலி... மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Tamil Nadu

  அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை க்ரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், தற்போதைய கழக பொருளாளர் ஆன திண்டுக்கல் சீனிவாசனுக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

  இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு, சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளன.

  ஏற்கனவே அவர் அமைச்சராக இருந்த போது அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

  இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  செய்தியாளர்: சங்கர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, Dindigal Sreenivasan