தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமனம்

திண்டுக்கல் லியோனி

தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக, திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த ஐ லியோனி நியமிக்கபட்டிருக்கிறார்.

 • Share this:
  தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக, திண்டுக்கல் லியோனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை தயாரித்து அச்சிட்டு விநியோகம் செய்ய உருவாக்கபட்ட அமைப்பு.

  1  முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடநூல், சிறுபான்மை மொழி பாடநூல், தொழிற்கல்வி பாடப்புத்தகம், ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பாட புத்தகம், பல்நுட்ப கல்லூரிக்கான பாட புத்தகம் ஆகியவற்றை தயாரிக்கும் பணியை இக்கழகம் மேற்கொள்கிறது. மேலும், மறுபதிப்பு, மொழிபெயர்ப்பு பணிகளையும் செய்கிறது.  இந்நிறுவனத்தின் தலைவராக, திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த ஐ லியோனி நியமிக்கபட்டிருக்கிறார். ஆசிரியரான இவர், மேடைப் பேச்சாளர், இலக்கிய சொற்பொழிவாளர், நகைச்சுவை பட்டிமன்ற நடுவராக மக்களால் அறியப்பட்டவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: