செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயர் ஆக்கியவர் முதல்வர் ஸ்டாலின் - திண்டுக்கல் ஐ.லியோனி
செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயர் ஆக்கியவர் முதல்வர் ஸ்டாலின் - திண்டுக்கல் ஐ.லியோனி
திண்டுக்கல் லியோனி!
Dindigul Leoni | செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி ‘வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே’ என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் என்று திமுக தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளரும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கும்மிடி பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது .இதில் தலைமைக்கழக கொள்கை பரப்புச் செயலாளர் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு பேசுகையில் செருப்பைத் தலையில் தூக்கிக் கொண்டு இருந்த சமுதாயத்தை மேயராக்கி வணக்கத்திற்குரிய மாண்புமிகு மேயர் அவர்களே என அழைக்க வைத்து திராவிட புரட்சியை செய்த தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பெண்கள் அரட்டை அடித்துக் கொண்டு வெட்டியாக இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி பெண்களுக்கு ஓட்டுரிமைவாங்கித் தந்தது நீதிக் கட்சி என்றும் பெண்களுக்கு சொத்துரிமை வாங்கித்தந்தது கலைஞர் என்றும் பெண்களுக்கு அரசியலில் 50% இட ஒதுக்கீடு வழங்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்றும், பெண் விடுதலைக்கு பாடிய பாரதியார் பாரதிதாசன் வழியில் ஆட்சி நடத்தி வருபவர் ஸ்டாலின் என்றும் செங்கோட்டை அருகே டெல்லியில் அறிவாலயத்தை நிறுவிய தலைவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் கை காட்டுபவரே பிரதமர் ஆவார் என்பதற்கு அதுவே ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், பெண்களுக்கு சம உரிமை என பல சாதனைகளையும் மக்கள நலத் திட்டங்களையும் வழங்கிக் கொண்டிருப்பது திராவிட மாடல் ஆட்சி என்றும் திண்டுக்கல் லியோனி தெரிவித்தார்....
செய்தியாளர் : பார்த்தசாரதி
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.