வேல்கம்பிணை வைத்து அரசியல் செய்யும் கேடுகெட்ட நிலைமை திமுகவிற்கு வரவில்லை. தொண்டர்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள் ஸ்டாலின் வாங்கினார் என்றும், வேல் கம்பினை வைத்து இந்துக்களின் ஓட்டை பெற வேண்டும் என்கிற அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை எனவும் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி கூறினார்.
மு.க.ஸ்டாலின் தலைமை காலத்தின் தேவை இலக்கும் நோக்கும் -234 என்கிற தலைப்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சென்னை கிழக்கு மாவட்ட திமுக வில்லிவாக்கம் மேற்கு பகுதி சார்பில் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் பகுதி செயலாளர் கூ.பி.ஜெயின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்சியில் திமுக கழக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ. லியோனி, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி. கே.சேகர்பாபு, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பா. ரங்கநாதன் உள்ளிட்ட திமுகவினர் 1000 த்திற்கும் மேற்பட் திமுகவினர் கலந்து கொண்டனர்.
அப்போது திண்டுக்கல் ஐ. லியோனி பேசுகையில், “வேல்கம்பை வைத்து அரசியல் செய்யும் கேடுகெட்ட நிலைமை இன்னும் திமுகவிற்கு வரவில்லை. தொண்டர்கள் கொண்டுவந்து கொடுத்தார்கள் வாங்கினார்.
இந்துக்களுக்கு திராவிட முன்னேற்ற கழகம் செய்ததை போல் வேறு எந்த இயக்கமும் செய்ததில்லை உங்களுடைய வேல்கம்பு அரசியல் மக்களிடம் எடுபடாது மக்களுக்காக தொண்டு செய்யும் திராவிட முன்னேற்ற கழகம்தான் இந்த நாட்டிலே வெற்றி பெறப்போகிறது.
ஆனால், பாஜகவினர் இன்று எடுத்து சென்றுள்ள வேல்கம்பு யாருடையது தெரியுமா?, முருகனுடையது தண்டாயுத பாணியை சுவாமிகளாக இருந்த முருகனை நிராயுத பாணியாகமாற்றி, அந்த முருகனின் வேலை இந்த முருகன் ஊர் முழுவதும் காண்பித்து கொண்டிருக்கிறார்.
இந்து, கிறிஸ்து, முஸ்லீம் என்கிற பாகுபாடு இல்லாமல் மக்களுக்காக சேவை செய்யும் நோக்கத்தோடு, மக்கள் பணியே மகேசன் பணி என்று சேவை செய்யும் இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்” என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த லியோனி, திமுக வேல் கம்பை வைத்து அரசியல் செய்வதாக குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள், வேல்கம்பை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. காரணம் வேல் கம்பை காண்பித்தான் இந்துக்களுக்கு நல்லது செய்தோம் சொல்கிற நிலைமையில் நாங்கள் இல்லை.
திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை என்கிற துறையை அமைத்தது திராவிட முன்னேற்ற கழகம். மேலும், திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியில் 2006 முதல் 2011 வரை சுமார் 3,500 கோயிலில் குடமுழக்கு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... அமமுக மாவட்ட செயலாளர்களுடன் சந்திப்பு.. சசிகலா இன்று முக்கிய ஆலோசனை
மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அரசியலை இன்று திராவிட முன்னேற்ற கழக பிடித்திருக்கிறகு அதனால் பாரதிய ஜனதாவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடாது.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.