• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என்று மாற்றி அச்சிடப்படும் - லியோனி

தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் ஒன்றிய அரசு என்று மாற்றி அச்சிடப்படும் - லியோனி

திண்டுக்கல் ஐ. லியோனி

திண்டுக்கல் ஐ. லியோனி

பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களிக் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

  • Share this:
தமிழக அரசின் பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து திண்டுக்கல் லியோனி வாழ்த்து பெற்றார்..

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த பதவி வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், மாணவர்கள் கல்வியை சுமையாக நினைக்காமல், மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் நூல்களை மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சமசீர் கல்வியை முன் உதாரணமாக வைத்து பாட நூல்களை தயாரிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பாடத்திட்டத்திலும் மத்திய அரசு என்ற வார்த்தை மாற்றப்பட்டு இனி வரும் காலங்களிக் ஒன்றிய அரசு என அச்சிடப்படும் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

Also Read : பாமக நிறுவனர் ராமதாஸ் பேரனுக்கும், ஏ.கே. மூர்த்தி மகளுக்கும் திருமணம்

பாமக இளைஞரணிஅன்புமணி கருத்திற்கு பதிலளித்த அவர், பெண்களை இழிவுப்படுத்தி பேசியதாக கூறியதற்கு தான் பல முறை கருத்து கூறியுள்ளதாகவும், முன்னாள் முதலமைச்சரையும் அன்புமணி ராமதாஸ் இழிவாக பேசியுள்ளதாகவும், அதை ஒப்பிடுகையில் இந்த கருத்து பெரியது அல்ல என்றும், அவரின் கருத்திற்கு பதில் கூற வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறினார்.

Also Read : மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பெண்களை இழிவாக பேசிய திண்டுக்கல் ஐ.லியோனிக்கு  பாடநூல் நிறுவனத் தலைவர் பதவியா? என்று அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசுபவருக்கு படிப்பு பற்றி என்ன தெரியும்? பாடநூல் நிறுவனத்தின் பணி அறிவை வளர்க்கும் பாடநூல்களை தயாரிப்பதாகும். லியோனி தலைமையில் தயாரிக்கப்படும் பாடநூல்களை படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்? என்றும் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி இருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: