Home /News /tamil-nadu /

தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்பனை... ரோட்டில் கொட்டி சென்ற விவசாயிகள்

தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்பனை... ரோட்டில் கொட்டி சென்ற விவசாயிகள்

தக்காளி

தக்காளி

தக்காளி விளைச்சல் அதிகமானதை தொடர்ந்து அவற்றின் விலை கடுமையாக குறைந்து 14 கிலோ தக்காளி பெட்டியின் விலை ரூ 30 முதல் 40 வரை விற்பனையாகிறது இதனால் ஒரு பெட்டிக்கு வண்டி வாடகை 20 மற்றும் கமிஷன், தக்காளி பறிப்பு செலவு என பார்க்கும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

மேலும் படிக்கவும் ...
    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள அம்பிளிக்கை காவேரியம்மாபட்டி, பொட்டி க்காம்பட்டி.  அரசப்பபிள்ளைபட்டி. சத்திரப்பட்டி. முத்துநாயக்கன்பட்டி. ஆகிய கிராமங்களில் சுமார் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் தக்காளி பயிரிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பாக தக்காளி வரத்து இல்லாததால் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை 1000 முதல் 1500 வரை விலை போனது. இதனால் கிலோ 150 முதல் 200 வரை ஒரு கிலோ தக்காளி விற்பனையானது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தக்காளி விளைச்சல் அதிகமானதை தொடர்ந்து தற்போது ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தினந்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி பெட்டிகள் வரத்து வருவதால் அவற்றின் விலை கடுமையாக குறைந்து 14 கிலோ தக்காளி பெட்டியின் விலை ரூ 30 முதல் 40 வரை விற்பனையாகிறது.

    இதனால் ஒரு பெட்டிக்கு வண்டி வாடகை 20 மற்றும் கமிஷன், தக்காளி பறிப்பு செலவு என பார்க்கும்போது விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் ஒரு கிலோ தக்காளி 2 ரூபாய் முதல் ரூ 3 ரூபாய்க் கே விற்பனையாகிறது. பல பகுதிகளில் விவசாயிகள் தக்காளி பழங்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். ஒருசில விவசாயிகள் பெட்டிக்கு பத்து ரூபாய் இருபது ரூபாய் லாபம் கிடைக்கும் என்ற சூழ்நிலையில் கொண்டு வந்து அதை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கேட்க ஆளில்லாமல் போவதால் அந்த தக்காளியை மீண்டும் விவசாயிகள் ரோட்டின் ஓரங்களிலும் காட்டுப் பகுதிகளிலும் கொட்டிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ‘கள் எமது உணவு’: கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி பனை தொழிலாளர்கள் 50வது நாளாக போராட்டம்!! 


     

    அதனால் ஒட்டன்சத்திரம் பகுதியில் அதிகப்படியான தக்காளி ஆண்டுதோறும் உற்பத்தியாவதால் இங்கு தக்காளி ஜூஸ் தயாரிக்கும் பேக்டரி அமைக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Dindigul, Tomato

    அடுத்த செய்தி