கிருஷ்ணகிரி: ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீது எழுந்துள்ள புகார்..

திமுகவில் இருந்துகொண்டு ரஜினிக்கு சர்ச்சை போஸ்டர்

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டு திமுகவில் இருக்கும் சிலர் ரஜினி முதல்வர் வேட்பாளர் என போஸ்டர் ஒட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்தவர்கள், மீண்டும் ரஜினியின் அரசியல் குறித்து சர்ச்சைக்குரிய போஸ்டர் ஒட்டி கிருஷ்ணகிரியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்துள்ளனர்.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அனுமதியின்றி ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வந்தன. இதனால் மக்கள் மன்ற நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்றது.  Also read: முதல்வர் வேட்பாளர் ரஜினி என மீண்டும் போஸ்டர் - வேண்டாமென்றாலும் கேட்காத ரசிகர்கள்

  இதில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியது ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து கடந்தாண்டு நீக்கப்பட்டு திமுகவில் இணைந்தவர்கள் என்பது தெரியவந்தது. தற்போது இவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் போஸ்டர்கள் ஒட்டி, மக்கள் மன்றத்துக்குள் குழப்பம் ஏற்படுத்த முயன்றுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் வெளியிட்டுள்ள உத்தரவில் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
  Published by:Rizwan
  First published: