Home /News /tamil-nadu /

தாயை கத்தியால் குத்தி தீவைத்து கொளுத்திய இளைஞர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

தாயை கத்தியால் குத்தி தீவைத்து கொளுத்திய இளைஞர் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல்

திண்டுக்கல்

பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு  வந்து பஞ்சவர்ணத்தை ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திண்டுக்கல் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தாயை வெட்டி தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தென்னம் பட்டியை சேர்ந்த சுப்பிரமணி இவர் ஆத்தூரில் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார் இவரது மனைவி பஞ்சவர்ணம் இவர்களுக்கு  3 மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகன் சதீஷ் (வயது 27) கடந்த வருடம் வரை தனியார்  லாரி நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக இவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இதனிடையே நேற்று இரவு தோட்டத்து வீட்டில் இருந்த பஞ்சவர்ணத்தை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் சதீஷ் கத்தியால் குத்தி உள்ளார். இதில் மயக்கமடைந்த பஞ்சவர்ணம் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலில் தீ வைத்து கொளுத்தி உள்ளார். பஞ்சவர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு  வந்து பஞ்சவர்ணத்தை ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    Also Read:  இவங்க எல்லாமே என் மனைவிதான்.. சகலகலா கல்யாணராமன் சிக்கியது எப்படி

    தற்பொழுது மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சங்கர்  (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Attempt murder case, Crime | குற்றச் செய்திகள், Dindugal

    அடுத்த செய்தி