• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்.. உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு நாடகம்

நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்.. உடலை தண்டவாளத்தில் வீசிவிட்டு நாடகம்

திண்டுக்கல் கொலை வழக்கில் கைதானவர்கள்

திண்டுக்கல் கொலை வழக்கில் கைதானவர்கள்

தந்தையை மகனே கொடூரமாக கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

  • Share this:
    திண்டுக்கல் அருகே நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கொன்று விட்டு உடலை தண்டவாளத்தில் வீசிய நாடகமாடிய நண்பர்கள் உட்பட 3 பேரை  48  மணி நேரத்தில்  கைது செய்தனர். 

    திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமம் செட்டியபட்டி ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம்  தண்டவாளத்தில் உருக்குலைந்த நிலையில் ஒரு ஆண் சடலம் கிடந்தது. இதுகுறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் வரவே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் முகம் அடையாளம் தெரியாத நிலையில் இருந்தது. மேலும் பிணத்தின் அருகே 2 உருட்டு கட்டைகளும், அதில் ரத்தக்கறையும் இருந்தன. மேலும் பீர் பாட்டில்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அம்பாத்துரை போலீசாரிடம் உடலை ஒப்படைத்து ரயில்வே போலீசார் விட்டு சென்று விட்டனர்.

    Also Read: கள்ளக்காதல் தகராறில் ரவுடி மனைவி வெட்டிக்கொலை - கூட்டாளிகள் கைது

    இதனையடுத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் நம்பரை வைத்து இறந்தவர் வெள்ளோடு கோம்பை பகுதியைச் சேர்ந்த ஜெரால்டு தங்கராஜ் (47) என கண்டறிந்தனர். போலீசார் அவர்கள் வீட்டுக்கு சென்று இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ஜெரால்டு தங்கராஜூக்கு திருமணம் ஆகி ரீத்தா என்ற மனைவியும், கிஷோர் (18) என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர். ரீத்தா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மகன் கிஷோரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முண்னுக்கு பின் முரணான தகவல் அளித்தார். ஆனால் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இது குறித்து போலீசார் கூறுகையில், ஜெரால்டு தங்கராஜ் ரீத்தாவை தனது சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு திருமணம் செய்து வைக்காமல் முத்தழகுபட்டியைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இருந்த போதும் ரீத்தாவை மறக்க முடியாமல் இருந்த ஜெரால்டு தங்கராஜ் கைக்குழந்தையுடன் அவரை கடத்தி வந்து 2-வது திருமணம் செய்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர் தற்போது 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    Also Read: நிர்வாண கோலத்தில் தகராறு செய்த டிராபிக் போலீஸ்.. அலறியடித்து ஓடிய பெண்கள் - சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளான குடியிருப்புவாசிகள்

    முதல் குழந்தையான கிஷோரை தனது மகனாகவே வளர்த்து வந்துள்ளார். 12 -ம் வகுப்பு வரை படித்த கிஷோர் அதன்பிறகு கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். ஜெரால்டு தங்கராஜ் வேலைக்குச் செல்லாமல் சேவல் சண்டை சீட்டாட்டம்   என்று இருந்து  வந்துள்ளார். தனது தாய் இறப்பதற்கு முன்பாக தான் வேறு ஒருவருக்கு பிறந்த விபரம் கிஷோருக்கு தெரிய வந்தது. இதற்காக அரசிடமிருந்து 1.10 லட்சம் வந்ததையும் குடித்துவிட்டு சீட்டாடி செலவழித்து வந்துள்ளார்  இதனால் தந்தையின் மீது வெறுப்பில் இருந்து வந்துள்ளார்.

    மேலும் ஜெரால்டு தங்கராஜூம் தனது மகன் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தை பறித்துக் கொள்வாராம். இதனால் தனது தந்தையை தீர்த்து கட்ட ஆறுமுக பாண்டி மற்றும் ஆபீஸ் என்ற பிராங்கிளின்  நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.அதன்படி கோவையில் வேலை பார்த்த கிஷோர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். தனது நண்பர்களுடன் கலந்து பேசி தந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதன்படி தான் ரெயில்வே கேட்டில் நிற்பதாகவும், மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வருமாறும் தந்தையிடம் போனில் தெரிவித்துள்ளார். அதனை நம்பி ஜெரால்டு தங்கராஜ் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

    அங்கு ஏற்கனவே மறைந்திருந்த கிஷோர் மற்றும் அவரது நண்பர்கள் உருட்டுக்கட்டை மற்றும் பீர் பாட்டிலால் அவரை தாக்கி கொன்று பின்னர் 20 அடி தூரத்தில் இருந்த தண்டவாளத்தில் உடலை வீசி சென்று விட்டனர். சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் அங்கிருந்த தடயங்கள் கிடைத்தன.மேலும் ஜெரால்டு தங்கராஜ் பயன்படுத்திய செல்போன் உரையாடல்களும் இந்த கொலைக்கு முக்கிய துருப்புச்சீட்டாக அமைந்தது.

    கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல கிஷோர் வழக்கமாக மறுநாள் வேலைக்கு சென்று வந்துள்ளார். அவரது உடலை கிஷோர் மற்றும் பாட்டி சம்பூர்ணம் ஆகியோர் அடையாளம் காட்டினர். தனது தாயை கடத்தி வந்து திருமணம் செய்து தன்னை கொடுமைபடுத்தியதால் கிஷோர் இந்த கொடூர கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன், கிஷோர் நண்பர்கள் ஆறுமுக பாண்டி மற்றும் ஆபீஸ் என்ற பிராங்கிளின் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையை கொடூர கொலை செய்து விட்டு நாடகம் ஆடிய  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: