திண்டுக்கல் அருகே முன்பகை காரணமாக வாலிபர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் விசாரணை.
திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராக்கி (எ) ராகேஷ். இவரது தந்தை மாணிக்கம். திண்டுக்கல் அடுத்துள்ள மாலப்பட்டி செட்டிக்குளத்தில் மீன் பிடிப்பதற்கான குத்தகை எடுத்துள்ளார். இதனிடையே நேற்று 02.01.22 இரவு குளத்தில் காவல் காத்துக் கொண்டு இருக்கும் பொழுது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் ராக்கேஷை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
Also Read: கடைசியாக பார்த்து சென்ற காதலி..உருக்கமாக கடிதம் எழுதிவைத்து உயிரைவிட்ட இளைஞர்
துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராகேஷை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலில் ஆறு இடங்களில் புல்லட் பாய்ந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் திண்டுக்கல்லில் துப்பாக்கி கலாச்சாரம் தற்போது தலைதூக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குளத்தை மீன்பிடிக்க ஏலம் எடுப்பதில் ஜான், பிரகாஷ், ஆட்டோ ஆனந்த் ஆகியோருக்கும் ராகேஷ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மூன்று முறை ராகேஷ் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். அந்த முன்பகை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன், தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் ரூபி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: சங்கர் ( திண்டுக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Death, Dindugal, Investigation, Murder, Police