Home /News /tamil-nadu /

செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தங்கையை வெட்டிக்கொன்ற அக்கா.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

செல்போன் கொடுக்காத ஆத்திரத்தில் தங்கையை வெட்டிக்கொன்ற அக்கா.. திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

Representational Image

Representational Image

Dindugal Murder | நீயும் என் பேச்சை கேட்கவில்லை என்றால் உன்னையும் கொன்று விடுவேன் நள்ளிரவில் மகள் சொன்னதைக்கேட்டு அதிர்ந்துபோன் தாய்..

    திண்டுக்கல்லில் பேசுவதற்கு செல்போன் கொடுக்க மறுத்த தங்கையை அரிவாள்மனையால்  அக்கா வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது அடைக்கனூர் கிராமம். இந்த கிராமத்தில் 80 வயது பழனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி (வயது 47)என்ற மகளும்  தமிழ்ச்செல்வி (45 வயது) என்ற மகளும்  கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி திண்டுக்கல்லில் உள்ள நிலையில் பழனியம்மாளும் இரண்டு மகள்களும் நேற்று இரவு வீட்டில் இருந்துள்ளனர். வெங்கடேஸ்வரி தனது தங்கையிடம் கோயம்புத்தூரில் உள்ள தனது மகனுக்கு போன் பேச வேண்டும் அதனால் உன் செல்போனை கொடு என்று கேட்டுள்ளார்.

    Also Read: கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த தந்தையை கொன்ற மகள்.. தாயும்.. கள்ளக்காதலனும் கைது

    தமிழ்ச்செல்வி போனில் பேலன்ஸ் இல்லை என்று கூறி கொடுக்க மறுத்துவிட்டார். இதில் தமிழ்ச்செல்வி வீட்டின் வெளியில் கட்டில் போட்டு உறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தனது தாய் பழனியம்மாளை எழுப்பி என் மகனுடன் பேச தமிழ்ச்செல்வி செல்போனை தர மறுத்ததால் அவளை அரிவாளால் வெட்டிக் கொன்று விட்டேன். நீயும் என் பேச்சை கேட்கவில்லை என்றால் உன்னையும் கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார்.

    Also Read: நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல் - இரட்டை கொலை சம்பவத்தின் பகீர் பின்னணி

    இதனால் பதற்றம் அடைந்த பழனியம்மாள் வெளியில் வந்து பார்த்த பொழுது ரத்த வெள்ளத்தில் தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தார். இதனையடுத்து வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன்,  ஆகியோர் உயிரிழந்த தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தங்கையை கொலை செய்த வெங்கடேஷ்வரியை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.முதல்கட்ட விசாரணையில் வெங்கடேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று காவல்துறை தரப்பில் தெரியவந்துள்ளது.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Dindigul, Murder, Phone call, Smartphone

    அடுத்த செய்தி