Home /News /tamil-nadu /

திருமணம் செய்துகொள்வதாக நகை, பணம் மோசடி: ஏமாற்றிய பெண்ணை காவல்துறையில் பிடித்துகொடுத்த மாப்பிள்ளை

திருமணம் செய்துகொள்வதாக நகை, பணம் மோசடி: ஏமாற்றிய பெண்ணை காவல்துறையில் பிடித்துகொடுத்த மாப்பிள்ளை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, நகை, பணம், பட்டுப்புடவைகளை மோசடி செய்த பெண்ணை, நிச்சயம் செய்த மாப்பிள்ளையே கையோடு பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். 

    திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 32 வயதான செல்லப்பாண்டி; தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது திருமணத்திற்காக தரகர்கள் மூலம் பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது புதுச்சேரி நேரு தெருவைச் சேர்ந்த சோபிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    அவரைப் பார்த்துப் பேசியதில் செல்லப்பாண்டிக்குப் பிடித்து விட்டது; திருமணம் செய்ய முன்வந்துள்ளார். ஆனால் தனது பெற்றோர் சுனாமியில் இறந்து போனதாகவும் தான் மட்டும் தனியாக வசிப்பதாகவும் கூறியுள்ளார்.

    அதை நம்பிய செல்லப்பாண்டி, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி புதுச்சேரியில், சோபிகாவின் வீட்டில் வைத்தே எளிமையான முறையி்ல் திருமண நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளர்.

    மேலும் நிச்சயதார்த்ததின் போது, ஒன்றரை பவுன் செயின், பட்டுப்புடவை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார்.

    அதன்பின் கடந்த 5 மாதங்களாக சோபிகா, செல்லப்பாண்டியிடம் பேசவில்லை. அவரது செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சந்தேகமடைந்த செல்லப்பாண்டி புதுச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வாடகைக்கு விடப்படும் என்ற பலகை தொங்க விடப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

    அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது சோபிகா ஒரு மோசடி பேர்வழி என்றும், திருமணம் செய்வதாகக் கூறி பலரையும் ஏமாற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எப்படியாவது சோபிகாவைப் பிடித்துவிட வேண்டும் என தீர்மானித்த செல்லப்பாண்டி, அவரது உறவினர்களைத் தேடிப் பிடித்து தொடர்பு கொண்டுள்ளார்.

    திருமணத்திற்காக புடவை மற்றும் நகை எடுக்க வேண்டும் என்பதால், திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    இந்தத் தகவல் அறிந்த சோபிகாவும், செவ்வாய்க்கிழமை அன்று திண்டுக்கல்லுக்கு சென்றபோது அவரைக் கையும் களவுமாககப் பிடித்துக் கொண்டார் செல்லப்பாண்டி.

    அப்போது தான் செய்தது தவறு தான் என்றும் நகை, பணத்தை திருப்பித் தந்து விடுவதாகவும் சோபிகா சமாதானம் பேசியுள்ளார்.  ஆனால் அதை ஒப்புக்கொள்ளாத செல்லப்பாண்டி அவரை திண்டுக்கல் நகர் தெற்கு காவல்நிலையத்தில் போலீசாரிடம் ஒப்படைத்தார்.

    சோபிகா, இதுபோன்று நுாதன முறையில் யார் யாரிடம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    திருமணம் செய்வதாக ஆசை காட்டி நகை, பணம் பறிக்கும் பெண்ணை, நிச்சயம் செய்த மாப்பிள்ளையே போலீசாரிடம் பிடித்துக் கொடுத்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Dindigal, Marriage

    அடுத்த செய்தி