Home /News /tamil-nadu /

கொடைக்கானல் காட்டுத் தீ.. ஊருக்குள் படையெடுத்த காட்டு விலங்குகள்...

கொடைக்கானல் காட்டுத் தீ.. ஊருக்குள் படையெடுத்த காட்டு விலங்குகள்...

வன விலங்குகள்

வன விலங்குகள்

Kodaikanal | வன விலங்குகள் சாலையில் சுற்றுவதால் வாகனங்களில் அடிபட்டு பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுட‌ன், வேட்டையாட‌ப்ப‌டும் சூழ‌லும் ஏற்ப‌ட்டுள்ள‌து

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காட்டுதீயின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு காட்டு மாடுகள், மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் பிரதான சாலைகளில் உலா  வருவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது. 

    கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில வாரங்க‌ளாக‌ அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதி ம‌ற்றும் வ‌ருவாய் நில‌ங்க‌ளிலும், த‌னியார் தோட்ட‌ப்ப‌குதிகளிலும் காட்டு தீ ப‌ர‌விய‌து, வ‌ன‌த்துறையின‌ர் ம‌ற்றும் தீய‌ணைப்புத்துறையின‌ரின் தீவிர‌ முய‌ற்சியால் காட்டு தீ  க‌ட்டுப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து.  கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் ம‌ழை பெய்து வ‌ந்தாலும் காட்டு  தீயின் தாக்கத்தினால் வ‌ன‌ப்ப‌குதியினை விட்டு இட‌ம் பெய‌ர்ந்த‌ மான், ம‌யில் காட்டுப்பன்றி உள்ளிட்ட‌ வ‌ன‌ வில‌ங்குக‌ள் வழக்கத்திற்கு மாறாக இரை மற்றும் த‌ண்ணீர் தேடி பிரதான மலைச்சாலைகளில் அடிக்க‌டி உலாவுகின்றன,

    Also Read: Theni Murder | கள்ளத்தொடர்பு.. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி.. தந்தையை மகனே கொன்றது விசாரணையில் அம்பலம்

    வனச்சரணாலயமான கொடைக்கானலில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன, விவசாய நிலங்கள் மற்றும் வனப்பகுதிக்கு அருகில் உள்ள குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில், கடமான், காட்டுமாடு, சருகுமான், மலை அணில், முயல்களும் தற்போது உலா வருகின்றன, இதனால் வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதுட‌ன், வேட்டையாட‌ப்ப‌டும் சூழ‌லும் ஏற்ப‌ட்டுள்ள‌து,

    பிரதான சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் உலா வரும் வன விலங்குகளை பாதுகாப்பதுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அவைகளை மீண்டும் அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    செய்தியாள‌ர்- ஜாப‌ர்சாதிக் ( கொடைக்கான‌ல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Animals, Fire, Forest, Kodaikanal

    அடுத்த செய்தி