திண்டுக்கல்லுக்கு பூட்டு எப்படி பெருமையோ அதேபோன்று பிரியாணியும் ஒரு தனிச்சிறப்பு, வட மாவட்ட மக்களுக்கு ஆம்பூர் பிரியாணி என்றால் தென் மாவட்ட மக்களின் சுவைப் பசியை தீர்த்து வைப்பது திண்டுக்கல் பிரியாணிதான்.
அதிலும் திருச்சி சாலையில் செயல்படும் கோல்டு ஸ்டார் பிரியாணி கடை திண்டுக்கல்லில் பேமஸ் என கூறுகின்றனர். மலைப்பகுதிகளில் வளரும் குறும்பாடுகளை வாங்கி வந்து அதன் இறைச்சியை பயன்படுத்தி, சீரக சம்பா அரிசியில் கமகமவென தயாரிக்கப்படும் மட்டன் பிரியாணி, ஆண்டு முழுவதும் இந்த பிரியாணி கடையில் பரிமாறப்படுகிறது.
ஆனால் தீபாவளி என்றாலே வான்கோழி பிரியாணிதான் இந்த கடையில் ஹாட் சேல். தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வான்கோழி பிரியாணி சீசன் தொடங்கி விடும் என்று கூறுகிறார் கடை உரிமையாளர்.
வான்கோழி பிரியாணிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் இந்த கடைக்கு வந்து வான்கோழி பிரியாணியை சுவைக்கின்றனர்.
மலைப்பகுதியிலிருந்து வரும் சுத்தமான தண்ணீரை கொண்டு சமைப்பதால் பிரியாணியின் சுவை தூக்கலாக இருக்கும் என்கின்றனர் வாடிக்கையாளர்கள்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.