திண்டுக்கல் அருகே கொரோனா விதிமுறைகளை மீறி வானவேடிக்கை மற்றும் கரகாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்ற கோயில் திருவிழாவால் மேலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் செங்குறிச்சி அருகே உள்ளது வல்லம் பட்டி கிராமம் இந்த மலைக் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த மலைக் கிராமத்தில் பத்ரகாளியம்மன் கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருவிழாவுக்காக அந்தப் பகுதி கிராம மக்கள் 15 தினங்களுக்கு முன்பாக காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். வல்லம் பட்டி கோவில் திருவிழாவானது இன்று இரவு ஊர் அருகே உள்ள தெப்பத்தில் கரகம் ஜோடிக்கப்பட்டு வானவேடிக்கைகள் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக 100 க்கும் மேற்பட்டோர் சென்றனர்.
இந்த வல்லம்பட்டி திருவிழாவானது சாதாரண நாட்களில் நடத்தப்படும் திருவிழாக்களை போல வானவேடிக்கைகள் மேளதாளங்கள் மின் ஒளி அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்ட கிராமத்தில், ஒலி ஒளி அமைப்புடன் வெகு விமர்சையாக திருவிழாவா நடைபெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருவிழாவை சிறப்பிக்க கரகாட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. கரகாட்டத்தை பார்ப்பதற்காக செங்குறிச்சி மலைக்கேணிகம்பிளியம்பட்டி, ராஜக்காபட்டி, சிலுவத்தூர் என பல கிராம பகுதிகளில் இருந்து வந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கரகாட்ட நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.
கொரோனா கால விதிமுறைகள் திரையரங்குகள், சந்தைகள், திருமண மண்டபங்கள், ஷாப்பிங் மால்கள், கோவில் திருவிழாக்கள் என பொதுமக்கள் அதிகம் கூட்டம் கூடும் இடங்களை தமிழக அரசு தொற்றுநோய் பரவா வண்ணம் காத்திட தடைகள் நடைமுறையில் உள்ள பொழுது வல்லம் பட்டி கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
Also read: ஆப் மூலம் கட்டிய பணத்திற்கு நாள்தோறும் அதிக வட்டி.. புதிய வகை நூதன மோசடி!!
மேலும், இங்கு முகக் கவசம், தனிமனித இடைவெளி இன்றி கரகாட்ட நிகழ்ச்சிகள் உட்பட அதிக கூட்டம் கூடியதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயகரமான நிலை உள்ளது. தொற்றுநோய் பரவாமல் தமிழக அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தக் கூடிய காவல் துறையினரோ சுகாதாரத் துறை அதிகாரிகளோ கண்டுகொள்ளாததால் வல்லம் பட்டி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட இந்த திருவிழாவில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் விழாக்குழுவினர் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
செய்தியாளர் - சங்கர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.