• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல தடை

அடுக்கம் வழியாக கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல தடை

கொடைக்கானல் மலைப்பாதை மூடல்

கொடைக்கானல் மலைப்பாதை மூடல்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால், அடுக்கம் மலைச் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

  • Share this:
    தொடர் மழையால் மலைப்பாதை சேதம் அடைந்ததால், பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியான கொடைக்கானல் சாலையில் வாகனங்கள் செல்ல நெடுஞ்சாலைத்துறை தடை வித்துள்ளது.

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தேனி மாவட்டம் காட்ரோடு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இருவழிப்பாதைகளே பிரதானமாக உள்ளன. இதற்கு மாற்றாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரையில் இருந்து அடுக்கம் வழியாக மற்றொரு சாலையும் இருக்கிறது.

    பெரியகுளத்தில் இருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள அடுக்கம் வரையிலும், அங்கிருந்து 24 கி.மீ தூரத்தில் உள்ள கொடைக்கானல் வரையிலும் என 48 கி.மீ தூரத்தில் கிட்டத்தட்ட 90 சதவீத பணிகள் நிறைவடைந்தது.

    இந்நிலையில், கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வந்த தொடர் மழையால், அடுக்கம் மலைச் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மேலும், புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளும்  வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்தது. அவற்றை மாநில நெடுஞ்சாலை துறையினர் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Must Read : வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: எந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு?

    இதன் காரணமாக அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.‌ தடை அறிவிப்பை மீறி வரும் வாகனங்களை பெரியகுளம் அருகே உள்ள செலும்பு பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், காட்ரோடு வழியாக செல்லூமாறு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    செய்தியாளர்- பழனிகுமார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: