Home /News /tamil-nadu /

மலைகளில் தவழும் பனி மூட்டங்கள்.. புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மலைகளில் தவழும் பனி மூட்டங்கள்.. புத்தாண்டை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையினால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானலில் புத்தாண்டை கொண்டாட குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள், மலைகளில் தவழும் பனி மூட்டங்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்ட‌தன் காரணமாகவும் புத்தாண்டு தொடங்குவதனை ஒட்டி கடந்த சில நாட்களாக கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக புத்தாண்டை கொண்டாட  சில‌ ம‌ணி நேரங்களே உள்ள நிலையில் த‌மிழ‌க‌த்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும், கேர‌ளா,ஆந்திரா,  உள்ளிட்ட‌ ப‌ல்வேறு மாநில‌ங்க‌ளை சேர்ந்த‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளும் கொடைக்கானல் நகரில் குவிந்து வருகின்றனர்.

    Also Read: கோவை குற்றாலத்துக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..

    இந்நிலையில் இன்று அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வருகை புரிந்ததன் காரணமாக ஒரு சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, வனப் பகுதிகளில் இருக்கும் சுற்றுலா தலங்களான மோயர் ச‌துக்க‌ம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை ஆகிய இடங்களில் மேகக் கூட்டங்களின் நடுவே தெரியும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டும், மேனிகளில் தவழ்ந்து விளையாடும் மஞ்சு மூட்டங்களைக் கண்டும், ம‌லைப்ப‌குதிக‌ளில் நில‌வும் ரம்ய‌மான‌ கால‌நிலையை சுற்றுலாப் பயணிகள் ரசித்தும்  மகிழ்ந்து வருகின்றனர்.

    நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்தும், பிரயண்ட் பூங்காவில் உள்ள வண்ண வண்ண மலர்களைக் கண்டும் ரசித்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர்,  இத‌னிடையே கொடைக்கான‌லுக்கு வ‌ரும் வெளி மாநில‌ சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனை சாவ‌டி ப‌குதியில் சுகாதார‌துறையின‌ர் கொரோனா ப‌ரிசோத‌னை மேற்கொண்டு வ‌ருகின்ற‌ன‌ர், மேலும் தொடர் சுற்றுலாப்பயணிகள் வருகையினால் சுற்றுலா தொழில் புரிவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செய்தியாள‌ர்: ஜாப‌ர்சாதிக் (கொடைக்கான‌ல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Dindugal, Kodaikanal, Tourism, Tourist spots

    அடுத்த செய்தி