குறிப்பாக வெள்ளி நீர் வீழ்ச்சி சோதனை சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து நகருக்குள் சென்று வனப் பகுதிகளில் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண் பாறை ஆகிய இடங்களில் மேகக் கூட்டங்களின் நடுவே தெரியும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டும், மேனிகளில் தவழ்ந்து விளையாடும் மஞ்சு மூட்டங்களைக் கண்டும் சுற்றுலாப் பயணிகள் ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.
நகரின் மையப் பகுதியில் இருக்கும் நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்தும், பிரயண்ட் பூங்காவில் உள்ள வண்ண வண்ண மலர்களைக் கண்டும் ரசித்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்து வருகின்றனர், சுற்றுலாப்பயணிகளின் தொடர் வருகையால் சுற்றுலா தொழில்புரிவோர் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கொடைக்கானல் செய்தியாளர்- ஜாபர்சாதிக்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.