Home /News /tamil-nadu /

கொட்டும் மழை.. கொள்ளை அழகில் கொடைக்கானல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொட்டும் மழை.. கொள்ளை அழகில் கொடைக்கானல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல்

கொடைக்கானல்

கொடைக்கானலில் தொடர் மழையின் காரணமாக முக்கிய குடி நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீரோடைகள், ஆறுக‌ள், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குறிப்பாக சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக டம் டம் பாறை அருகே உள்ள தலையார் அருவி,வெள்ளி நீர் வீழ்ச்சி அருவிகளிலும் நகர்ப்பகுதிகளில் உள்ள  வட்டக்கானல் அருவி,கரடி சோலை அருவி,தேவதை நீர் வீழ்ச்சி,பம்பார் அருவி  உள்ளிட்ட ப‌ல்வேறு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காண‌ப்ப‌டுகின்ற‌து.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து,செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.மேலும் தொடர் மழையின் காரணமாக முக்கிய குடி நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருவதுட‌ன் மலைப்ப‌குதிக‌ள் முழுவதும் ப‌ச்சை ப‌சேல் என‌ காட்சிய‌ளிப்ப‌தும் குறிப்பிடத்தக்கது.
Published by:Ramprasath H
First published:

Tags: Falls, Heavy rain, Kodaikanal, Tourist spots

அடுத்த செய்தி