ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

கொடைக்கானலில் கிளைமேட்லாம் நல்லா தான் இருக்கு.. ஆனாலும் புலம்பும் சுற்றுலா பயணிகள்..!

கொடைக்கானல்,

கொடைக்கானல்,

கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை, இதமான சீதோஷ்ண சூழ்நிலை, மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்கள் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால்  சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கொடைக்கானலில் மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்படுமா என சுற்றுலா பயணிகளிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக நீலகிரி, கொடைக்கானல், குற்றாலம் உள்ளிட்ட மலைவாச தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்திருந்தது. இதனையடுத்து ஜூலை மாதம் 7 தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய  ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது.

இதில் குறிப்பாக மாவட்டம் விட்டு மற்ற மாவட்டங்களுக்கு செல்ல வெளிமாவட்ட பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறையை தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது.

Also Read:  ராஜ் குந்த்ராவுக்கு ஆபாச படங்கள் மூலம் ஒரு நாளில் 8 லட்சம் வருமானம்!

இருப்பினும், கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மர சோலை, குணா குகை, பில்லர் ராக், மன்னவனூர் சூழல் சுற்றுலா, தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கோக்கர்ஸ் வாக் மற்றும் படகு குழாம் உள்ளிட்ட  சுற்றுலா தலங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகளுக்கு  தமிழக அரசு விதித்த தடை தொடருவதால் அனைத்து சுற்றுலா தலங்களிலும்  சுற்றுலா பயணிகள்  இல்லாமல் வெறிச்சோடி  காட்சியளிக்கிறது.

கொடைக்கானல்,

இதனால் கொடைக்கானலுக்கு வரும்  சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியை சுற்றி  சைக்கிள் மற்றும் குதிரை சவாரி மட்டும் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில் கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை, இதமான சீதோஷ்ண சூழ்நிலை, மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேகக்கூட்டங்கள் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருவதால்  சுற்றுலா பயணிகளின் வருகையும் சற்று அதிகரித்துள்ளது.

Also Read:  முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி ரெய்டு!

கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் திறக்கப்படாததால் வழக்கமாக 2, 3 நாட்கள் தங்கி சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும்  சுற்றுலா பயணிகள் ஓரிரு நாட்களிலேயே தங்களது ஊர்களுக்கு திரும்புவதாகவும் முக்கிய சுற்றுலா தலங்களை  காணமுடியாமல் ஏமாற்றத்துடன் செல்வதாக வருத்தத்துடன்  தெரிவிக்கின்றனர்.

இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் விரைவில்  திறக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 செய்தியாள‌ர் ஜாப‌ர்சாதிக், கொடைக்கான‌ல்

First published:

Tags: Dindugal, Kodaikanal, Tourism, Tourist spots