ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tomato prices | ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரை விற்பனை... விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி

Tomato prices | ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரை விற்பனை... விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி

ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரை விற்பனை

ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய் வரை விற்பனை

Tomato prices | ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வருகையால் கோடை காலத்தில் உள்ளூர் தக்காளிகளுக்கு விலை இன்றி விவசாயிகள் தவித்து வந்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆந்திரா மற்றும் கர்நாடகா தக்காளி வருகை இன்மையால் திண்டுக்கல்  மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தைக்கு உள்ளூர் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. 4 ஆண்டுகளுக்குப்பின்  விலை உச்சமடைந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே உள்ளது அய்யலூர். இந்த ஊரைச் சுற்றி  சுமார் 20 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள வடமதுரை, தென்னம்பட்டி, கடவூர், மம்மாணியூர், மலையூர், கொம்பேறிபட்டி, புத்தூர் , காக்காய் கவுண்டனூர் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் தக்காளி விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு விளையக்கூடிய சுமார் 100 டன்  தக்காளி விற்பனைக்காக   அய்யலூரில்   தனி சந்தையே நடைபெறும். இந்த சந்தைக்கு  தங்கள் தோட்டங்களில் விளையக்கூடிய தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருவர்.

இங்கு விளையக்கூடிய தக்காளிகள் தரமாக உள்ள காரணத்தினால் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், திருப்பூர், சேலம், புதுக்கோட்டை திருச்சி, சென்னை,  மணப்பாறை, உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு  ஏல முறையில் வாங்கிச் செல்வர். சில ஆண்டுகாலமாக வெளி மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வருகையால் கோடை காலத்தில் உள்ளூர் தக்காளிகளுக்கு விலை இன்றி விவசாயிகள் தவித்து வந்தனர்.

இந்த கோடைகாலத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும் தக்காளி வரத்துகள் அதிகரித்துக் காணப்பட்ட சூழ்நிலை இருந்ததால் சென்ற மாதத்தில் உள்ளூரில் விலையக்கூடிய தக்காளிகளுக்கு விலை இன்றி 1 ரூபாய், 2 ரூபாக்கு விற்பனை  ஆனதால் எடுப்பு கூலிக்கு கூட விலையின்றி தவித்து வந்த விவசாயிகள்  தங்களது தோட்டங்களில் விளையக்கூடிய தக்காளிகளை  சாலையோரங்களில் கொட்டிக் சென்ற அவல நிலையும் ஏற்பட்டது.

ALSO READ |  தஞ்சையில் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்.. தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை

தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கோடை மழை பெய்து வந்த காரணத்தினால் அங்கு விளைந்த தக்காளி செடிகள் முற்றிலும் சேதமடைந்தன. வெளி மாநில தக்காளிகள் தமிழகத்திற்கு வருகை இன்மையால் சென்ற மாதம் வரை 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் விற்பனையான நிலைமாறி  தற்போது உள்ளூரில் விலைந்த 14 கிலோ கொண்ட ஒரு பெட்டி 700 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.

கோடை காலங்களில்  நான்கு ஆண்டுகளுக்கு  முன்பு விற்பனையானது போல் இந்த ஆண்டு ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 60 ரூபாய் விற்பனை ஆவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

செய்தியாளர் : சங்கர்

First published:

Tags: Farmers, Tomato