TN Election Result 2021: வாக்கு எண்ணிக்கைக்கு தயாரான முகவர்கள்!

TN Election Result 2021: வாக்கு எண்ணிக்கைக்கு தயாரான முகவர்கள்!

வாக்கு எண்ணிக்கைக்கு தயாரான முகவர்கள்

வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்குள் மாஸ்க் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நெறிமுறையுடன் சென்றனர்.

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் கடந்த மாதம் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இருபெரும் திராவிட கட்சிகளான அதிமுக - பாஜக ஒரு கூட்டணியாகவும், திமுக - காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் களம் கண்டன. தவிர அமமுக, மநீம, நாதக ஆகியவைகளும் தேர்தலில் போட்டியிட்டன.

    இதையடுத்து, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு வாக்குகள் எண்ணப்படும் என்பதால், முழுமையான முடிவுகள் வெளியாக நள்ளிரவு ஆகலாம் என்று கூறப்படுகிறது. வாக்கு எண்ணப்படும் நிலையில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

    இதற்கிடையே திண்டுக்கல்லில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் அனைவரும் கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி மாஸ்க்குடன் மையத்துக்குள் சென்றனர். அவர்களுக்கு வாயிலில் வைத்து சானிடைசர் வழங்கப்பட்டது. அந்த மையத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: