சேலம் வழியாக கர்நாடகாவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக ஒரு மாத காலமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மதுபானங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பெயரில், காவல்துறை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் சேலம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரியில் சோதனை செய்தபோது காய்கறிகளுக்கு நடுவே மதுபானங்கள் வைத்து கடத்தி வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
Also read: டாஸ்மாக்கில் மதுபாட்டிலை வாங்கியதும் சென்றுவிடுவார்கள்; டீக்கடையில் அப்படியில்லை.. திருநாவுக்கரசர் எம்.பி.
பின்னர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,641 மதுபாட்டில்கள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேஷ், சந்தோஷ்குமார், முனிராஜ் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்பவர் கர்நாடகாவில் இருந்து மதுபானங்களை கடத்தி வந்து கொடுத்தால், பணம் கொடுப்பதாக கூறியதால் கடத்தலில் ஈடுபட்டோம் என்று விசாரணையில் கூறியுள்ளனர். இந்த நிலையில் தலைமறைவாக உள்ள ராகேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.