முகப்பு /செய்தி /தமிழ்நாடு / படிக்க ஆசைப்பட்ட காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்... 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி... திருமணமாகி 9 மாதத்தில் கோர சம்பவம்

படிக்க ஆசைப்பட்ட காதல் மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்... 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி... திருமணமாகி 9 மாதத்தில் கோர சம்பவம்

காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்

Dindigul Crime : திண்டுக்கல்லில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசைபட்ட காதல் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் திருமணமாகி 9 மாதத்தில் பட்டபகலில் கழுத்தை அறுத்து படுகொலை செய்த காதலன், மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ஸ்டிகோரெயான்.  அதே பகுதியைச் சேர்ந்த ஜெப்ரினா இவர் 8 ம் வகுப்பு படித்து வரும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வெளியூர் சென்று விட்டனர். ஜெப்ரினாவுக்கு திருமண வயது பூர்த்தி ஆகாததால் அவரது பெற்றோர்கள் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக் கொண்ட புதுக்கடை காவல்துறையினர் இருவரையும் கண்டுபிடித்து அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மீண்டும் இருவரும் காதலித்து வந்த நிலையில் ஜெப்ரினா பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் போது மே 21 ம் தேதியுடன் திருமண வயது பூர்த்தியானது.

பின்பு ஜூன் 10ம் தேதி இருவரும் வீட்டை விட்டு சென்னைக்கு சென்றனர். அங்கு சென்ற இருவரும் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு திருமணம் செய்ய முயற்சித்துள்ளனர், சில காரணங்களால் அவர்களின் பதிவை ஏற்க முடியாது என்று பத்திரப்பதிவுதுறை கூறியுள்ளது. இவர்கள் திருமணம் பத்திர பதிவு செய்யாமல் சென்னையிலேயே அடுக்குமாடி வீடு வாடகைக்கு எடுத்து பணிக்குச் சென்று வாழ்ந்து வந்துள்ளனர்.

சென்னையில் பணிபுரிந்து, சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், ஸ்டிகோரெயானின் தாய் ஹெலன் திண்டுக்கல் வசிக்கும் நிலையில் அங்கே இருவரும் சென்றனர். திண்டுக்கல் அருகே உள்ள தெப்பக்குளத்து பட்டியில் அரசு பள்ளியில் ஹெலன் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அங்கே, மூன்று பேரும் சேர்ந்து திண்டுக்கல் ஓ.எம்.ஆர். பட்டி நடுத்தெருவில் 3 மாதத்துக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்துதங்கியுள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், ஜெப்ரினாவுக்கு கோவையில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் வேலை கிடைத்துள்ளது. இதனால் அங்கு சென்ற அவர், வேலை பார்த்துக் கொண்டு பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். காதல் மனைவி பிரிந்து சென்ற பின்பு இன்ஸ்டாகிராம் மூலம் மனைவி எங்கு உள்ளார் என்பதை கண்டறிந்து மூன்று தினங்களுக்கு முன்பு கோவை சென்றுள்ளார்.

அங்கே இருவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட அவர்களை சமாதானப்படுத்த திண்டுக்கல்லில் உள்ள தாய் ஹெலான் அழைத்துள்ளார் . நேற்று முன்தினம் கோவையில் இருந்து இருவரும் ஓ.எம்.ஆர். பட்டிக்கு வந்துள்ளனர். இருவருக்கும் சமாதானப்படுத்தி விட்டு வழக்கம்போல் ஹெலான் பள்ளிக்குச் சென்றுள்ளார்.  தனிமையில் இருந்த ஸ்டீகோரெயான் நாம் முன்பு சென்னையில் இருந்தது போல மீண்டும் சென்னைக்கு சென்று விடுவோம் என்று கூறியுள்ளார். ஆனால் ஜெப்ரினா, நான் கோவையில் இருந்து படித்துக்கொண்டே பணியாற்றி வருகிறேன் சென்னைக்கு வர முடியாது என்று கூறியுள்ளார்.

Read More : மெடிக்கலில் போதை மாத்திரைகள் சப்ளை.. சென்னையில் சிக்கிய கும்பல் - போலீஸார் தீவிர விசாரணை

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. ஆத்திரமடைந்த ஸ்டீகோரெயான் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். காதல் மனைவியை படுகொலை செய்த பயத்தில் தானும் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது, தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Must Read : ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் சில்மிஷம்.. வழக்கறிஞருக்கு சிறை தண்டணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதல் திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

top videos

    செய்தியாளர் - சங்கர், திண்டுக்கல்.

    First published:

    Tags: Crime News, Dindigul, Murder