Home /News /tamil-nadu /

வேட்டை தடுப்பு காவலரை மிதித்து கொன்ற யானை : திண்டுக்கல்லில் சோகம்

வேட்டை தடுப்பு காவலரை மிதித்து கொன்ற யானை : திண்டுக்கல்லில் சோகம்

யானை - மாதிரிப்படம்

யானை - மாதிரிப்படம்

Dindugul : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே தனியார் தோட்டத்தில் புகுந்த யானை கூட்டத்தை விரட்ட சென்ற வேட்டை தடுப்பு காவலர் சுந்தரம் என்பவர் யானை மிதித்ததில் உயிரிழந்தார்.

    திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் கடந்த சில தினங்களாக யானை கூட்டம் முகாமிட்டு அங்குள்ள தனியார் தோட்டங்களை சேதப்படுத்தி வந்தது.

    இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் கன்னிவாடி வனச்சரக ஊழியர்கள் சுமார் பத்திற்கும் மேற்பட்டோர் யானைகூட்டத்தை விரட்ட அப்பகுதியில் முகாமிட்டு யானையை விரட்டும்பணியிஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், அதிகாலை பண்ணப்பட்டிகோம்பை அருகே வைகை பண்ணை என்ற தனியார் தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் தொன்னை, உலகம்பஞ்சு மரங்களை சேதப்படுத்தியது.  இதனைத் தடுக்க, பட்டாசு வைத்து விரட்டுவதற்காக குய்யவநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரம் என்ற வேட்டைதடுப்பு காவலர் சென்றார்.

    வேட்டை தடுப்பு காவலர் யானை மிதித்து பலி


    இந்நிலையில், எதிர்பாராதவிதமாக யானை மிதித்து சம்பவ இடத்திலே அவர் பலியானார். இதனை தொடந்து தகவல் அறிந்த கன்னிவாடி வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தைக் கைபற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Must Read : அடாவடி மாமூல்.. தமிழக லாரிகள் ஓட்டுநர்களை தாக்கும் தெலங்கானா கும்பல் - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    மேலும், கன்னிவாடி வன பகுதியில் யானை மிதித்து பொதுமக்கள் மற்றும் வன ஊழியர்கள் பலியாகி வரும் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாயர் - சங்கர், திண்டுக்கல்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Dindigul, Elephant

    அடுத்த செய்தி