Home /News /tamil-nadu /

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு.... கொடைக்கான‌ல் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌த் த‌டை

சுற்றுலாப் பயணிகள் கவனத்துக்கு.... கொடைக்கான‌ல் பேரிஜ‌ம் ஏரிக்கு செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌த் த‌டை

கொடைக்கான‌ல்

கொடைக்கான‌ல்

Dindigul District : நேற்று மாலை முதல் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் இன்று முதல் ம‌று அறிவிப்பு வ‌ரும் வ‌ரை பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர்.

மேலும் படிக்கவும் ...
    காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் பேரிஜ‌ம் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதிகளில் முகாமிட்டுள்ள‌தால் இன்று முத‌ல் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ளுக்கு அனுமதி இல்லை என வ‌ன‌த்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ச‌ர்வதேச‌ சுற்றுலாத‌ல‌மாகும், இங்கு தூண்பாறை, குணா குகை, ப‌சுமை ப‌ள்ளத்‌தாக்கு, பைன்ம‌ர‌ச்சோலை, மோய‌ர் ச‌துக்க‌ம், பிரைய‌ண்ட் பூங்கா, ரோஜா பூங்கா என‌ ப‌ல்வேறு சுற்றுலாத் த‌ல‌ங்க‌ள் இருந்தாலும் சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளை பெரிதும் க‌வ‌ரும் வித‌மாக‌ அமைந்திருப்ப‌து பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ன‌ப்ப‌குதியில் அமைந்துள்ள‌ வ‌ன‌த்துறையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் உள்ள‌ பேரிஜ‌ம் ஏரி, தொப்பிதூக்கிப்பாறை, அமைதிப்ப‌ள்ள‌தாக்கு உள்ளிட்ட‌ சுற்றுலாத‌ல‌ங்க‌ளாகும்.

    இத‌னைத் தொட‌ர்ந்து இந்த‌ பேரிஜ‌ம் வ‌ன‌ப்ப‌குதிக்கு செல்ல‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ன‌த்துறையின‌ரின் அனும‌தி பெற்று அத‌ற்குரிய‌ க‌ட்ட‌ண‌ம் செலுத்தி நாள் தோறும் குறிப்பிட்ட‌ அளவிலான சுற்றுலாப் ப‌யணிக‌ள் சென்று அங்குள்ள‌ இய‌ற்கை எழில் கொஞ்சும் மன‌திற்கும், க‌ண்க‌ளுக்கும் புத்துண‌ர்ச்சி அளிக்கும் சுற்றுலாத‌ல‌ங்க‌ளை க‌ண்டு ர‌சித்து வ‌ருவ‌து வாடிக்கையான‌ ஒன்று.

    ALSO READ |  'குடிநீர், கழிவறை, வகுப்பறை வசதி வேண்டும்' - தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
    இந்நிலையில் நேற்று மாலை முதல் இந்த‌ பேரிஜ‌ம் ப‌குதியில் காட்டு யானைக‌ள் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌தால் இன்று முதல் ம‌று அறிவிப்பு வ‌ரும் வ‌ரை  பேரிஜ‌ம் ஏரிக்கு சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் செல்ல‌ த‌ற்காலிக‌மாக‌ த‌டைவிதித்துள்ள‌தாக‌ வ‌ன‌த்துறையின‌ர் அறிவித்துள்ள‌னர், மேலும் பேரிஜ‌ம் ஏரிப்ப‌குதியில் குட்டியுட‌ன் முகாமிட்டுள்ள‌ யானை கூட்ட‌ம் வேறு ப‌குதிக்கு செல்கின்ற‌தா என‌வும் வ‌ன‌த்துறையின‌ர் க‌ண்காணித்து வ‌ருகின்ற‌ன‌ர்.

     

    கொடைக்கான‌ல் செய்தியாள‌ர் : ஜாப‌ர்சாதிக்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Dindigul

    அடுத்த செய்தி