Home /News /tamil-nadu /

கொடைக்கானலில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

கொடைக்கானலில் 2-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ

kodaikanal forest fire

kodaikanal forest fire

Kodaikananal Wild Fire | வனப்பகுதிகளில் காட்டு தீ எரிந்து வருவதால் அரியவகை மரங்களும்,மூலிகை செடிகளும் தீயில் கருகி வருகின்றன

கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் 2வது நாளாக  நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் காட்டு தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகலில் கடுமையான வெப்பம் நிலவி வ‌ருவ‌துடன் மித‌மான‌ காற்றும் வீசி வ‌ருவ‌தால் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே புத‌ர் ப‌குதிக‌ளிலும் அட‌ர்ந்த‌ வ‌ன‌ப்ப‌குதிக‌ளிலும் காட்டுத்தீ எரிந்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதிக்குட்பட்ட  தோகைவரை என்ற வனப்பகுதியில் நேற்று இரவு முதல் காட்டு தீயானது சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில்  செடிகள்,மரங்களில்  பரவி  கொழுந்து விட்டு இரண்டாவது நாளாக  தீ எரிந்து வருகிறது. வனப்பகுதிகளில் காட்டு தீ எரிந்து வருவதால் அரியவகை மரங்களும்,மூலிகை செடிகளும் தீயில் கருகி வருகின்றன.



மேலும் இந்த வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளும் அருகில் உள்ள‌ ந‌க‌ர்ப‌குதிக‌ளுக்கும், பிர‌தான‌ ம‌லைச்சாலைக‌ளுக்கும் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, ப‌ற்றி எரிந்து வ‌ரும் காட்டு தீயை அணைக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட  வனப்பணியாளர்கள் தீ த‌டுப்பு எல்லைக‌ளை அமைப்ப‌தில் தீவிர‌ம் காட்டி வருகின்றனர்,காட்டு தீ தொடர்ந்து எரிந்து வருவதால் தோகைவரை,மச்சூர், பெருமாள்ம‌லை உள்ளிட்ட பகுதிகளும், வ‌த்த‌ல‌க்குண்டு பிர‌தான‌ ம‌லைச்சாலையும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.

Also Read : அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள்... இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு உக்ரைன் கல்லூரி அறிவிப்பு

கொடைக்கானல் ம‌ச்சூர் தோகைவ‌ரை மலைப்பகுதிகளில் நேற்று இர‌வு ப‌ர‌விய‌ தீயானது காற்றின் வேக‌த்தில் பெருமாள் ம‌லை வ‌ன‌ப்ப‌குதி வ‌ரை தொட‌ர்ந்து ப‌ற்றி த‌ற்போது வ‌ரை எரிவ‌தால் தீயை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாம‌ல் வ‌ன‌த்துறையின‌ர் சிர‌ம‌ம் அடைந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Fire accident, Forest, Kodaikanal

அடுத்த செய்தி