முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வத்தலக்குண்டு அருகே தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த மகன்கள் கைது!

வத்தலக்குண்டு அருகே தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த மகன்கள் கைது!

தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த மகன்கள்

தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த மகன்கள்

வனராஜா தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயற்சித்துள்ளார். எனினும், அவரை விடாத மகன்கள் இருவரும் துரத்தி சென்று உருட்டுக்கட்டையால்  பலமாக தாக்கி உள்ளனர்.

  • Last Updated :

வத்தலக்குண்டு அருகே தாயை தாக்கிய தந்தையை கொலை செய்த மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே செங்கட்டாம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வனராஜா வயது 52, இவரது மனைவி ஈஸ்வரி வயது 50, இருவக்கும் குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் வழக்கமான சண்டையின்போது வனராஜா தனது மனைவியை கத்தியால் இடது கையில் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த ஈஸ்வரியை அருகில் உள்ளவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

தகவலறிந்த வனராஜா, ஈஸ்வரி தம்பதியினரின் மகன்களான முத்துச்சாமி, ஊர் காலன் இருவரும் சேர்ந்து தாயை தாக்கிய தந்தையை தாக்க முயன்றுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, வனராஜா தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயற்சித்துள்ளார். எனினும், அவரை விடாத மகன்கள் இருவரும் துரத்தி சென்று உருட்டுக்கட்டையால்  பலமாக தாக்கி உள்ளனர். இதில், வனராஜா தெருவிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து,  திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வனராஜா உயிரிழந்தார்.

தாயை தாக்கியதால் தந்தையை கொலை செய்த மகன்கள் முத்துச்சாமி, ஊர்காலன் இருவரையும்  காவல்துறையினர் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - சங்கர்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Dindugal, Murder