தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை. மெடிக்கல் அட்மிசன் நீட் மூலமாக தான் நடத்த வேண்டும் என நீட் தேர்வு தொடர்பான கேள்விக்கு கார்த்திக் சிதம்பரம் எம்.பி. குழப்பமான பதிலைத் தந்தார்.
திண்டுக்கல் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வருகை தந்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை ஆனால் நடைமுறையில் இன்று பார்க்கும் போது நீட்டை தவிர்க்க முடியவில்லை. மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா உரிமத்தோடு தான் மெடிக்கல் கல்லூரி நடக்கனும்.
Also Read: தலிபான்கள் ஆட்சியை பிடித்த நாளில் காபுல் வானில் போராடிய இந்திய விமானம் – திக் திக் நிமிடங்கள்!
மெடிக்கல் அட்மிசன் நீட் மூலமாக தான் நடத்த வேண்டும். இந்தாண்டு நீட் விலக்கு என்னை பொருத்தவரை தமிழக அரசால் பெற முடியவில்லை வருங்காலங்களில் சட்டரீதியாக விலக்கு பெற முயற்சி செய்வார்கள். இந்தாண்டு என்னை பொறுத்தவரை நீட் தேர்வுக்கு தயாராகி தேர்வை எழுதி விடுவார்கள்.
பாராளுமன்றத்தில் கருத்தை கூற வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எல் ஐ சி காப்பீட்டு கழகம் தனியார் மயமாக்குவதற்கு ராஜ்யசபாவில் அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்தது எந்த காரணத்தால் பாஜகவுக்கு ஆதரவு தந்தார்கள் என ஈபிஎஸ், ஒபிஎஸ் பதில் கூற வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்னைக்கு வரை அதிமுக பதில் கொடுக்கவில்லை. எல் ஐ சியை தனியார் மயமாக்க கூடாது என எல்லா கட்சிகளும் தெரிவித்தனர் பாஜவுடன் கூட்டணியில் இருந்த 3 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜகவுக்கு அடிமையாக உள்ளது அதிமுக இங்கு இரட்டை வேடம் போடுகிறது. மோடி இமாலய பொய்களை திரும்ப திரும்ப சொல்லி வருகிறார் என கார்த்திக் சிதம்பரம் பேட்டியளித்தார்.
சங்கர், செய்தியாளர் - திண்டுக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Karthi chidambaram, Neet, Neet Exam