டாஸ்மாக் கடைகளில் குறைந்த விலை மதுபானங்களுக்கு தட்டுப்பாடு: மதுப்பிரியர்கள் வேதனை!!

டாஸ்மாக் கடை

நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகமான அளவில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.

  • Share this:
    கொடைக்கானல் டாஸ்மாக் கடைகளில் குறைந்த விலை மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் கடந்த திங்கள் முதல் திறக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டி போட்டு கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நீண்ட நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் அதிகமான அளவில் மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர். இதனால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த விலை குறைந்த மதுபாட்டில்கள் அனைத்தும் விற்று தீர்ந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதனை தொடர்ந்து தற்போது கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று காலை முதல் உயர்ரக மது பாட்டில்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டதால், மதுப்பிரியர்கள் உயர்ரக மது பாட்டில்களை வாங்க முடியாமலும் பண பற்றாக்குறையாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    குறிப்பாக வார இறுதி நாளான இன்று மதுக்கடைகளில்  மதுபானங்கள் இல்லாததால் மதுப்பிரியர்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இது குறித்து மதுப்பிரியர்கள் கூறுகையில், ஏற்கனவே நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ்மாக் கடைகள் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு பிடித்தமான மதுபாட்டில்கள் மற்றும் விலை குறைந்த மதுபாட்டில்கள் கிடைக்காததால் வருத்தமடைவதாகவும் கூறுகின்றனர்.

    Also read: இ-பதிவுக்கும், இ-பாஸூக்கும் வித்தியாசம் என்ன?

    மேலும் அதிக விலைக்கு மதுபானங்களை வாங்க முடியாத சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது, குறைந்த விலை மதுபானங்களுக்காக காலையில் இருந்து அலைந்து திரிவதாகவும்  வேதனையுடன்  தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

    செய்தியாள‌ர் -  ஜாப‌ர்சாதிக்
    Published by:Esakki Raja
    First published: