Home /News /tamil-nadu /

ரேஷன் கடைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் அனுப்பும் பணி தீவிரம்

ரேஷன் கடைகளுக்கு இலவச வேஷ்டி, சேலைகள் அனுப்பும் பணி தீவிரம்

ரேஷன் கடை

ரேஷன் கடை

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் இலவச வேட்டி சேலைகள் நியாயவிலை கடைகளுக்கு அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் திண்டுக்கல் கிழக்கு தாலுகா பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான இலவச வேட்டி சேலைகள் தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து  முதல்கட்டமாக திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட சாணார்பட்டி, கம்பிளியம்பட்டி, சிலுவத்தூர், திண்டுக்கல் கிழக்கு ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு என 76,363 வேஷ்டிகளும், 76,314 சேலைகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வாகனங்கள் முலம் அந்த அந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் அறிவிப்பு வந்தவுடன்  பொதுமக்களுக்கு வழங்கப்படும் . என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also Read : டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் கட்டாயம் அறிவிப்பை வரவேற்கிறோம், ஆனால் இந்த ஆண்டு வேண்டாம் - மாணவர்கள் கருத்து

 
Published by:Vijay R
First published:

Tags: Dindigul, Ration Shop

அடுத்த செய்தி