Home /News /tamil-nadu /

நம்ம யார் வம்புக்கு போறது இல்ல - போலீஸ் ஸ்டேஷனில் புலம்பிய மாடர்ன் பெண் சாமியார்

நம்ம யார் வம்புக்கு போறது இல்ல - போலீஸ் ஸ்டேஷனில் புலம்பிய மாடர்ன் பெண் சாமியார்

திண்டுக்கல் பெண் சாமியார்

திண்டுக்கல் பெண் சாமியார்

மோசடி வழக்கில் பெண் சாமியார் பவித்ராவை திண்டுக்கல் போலீஸார் கைது செய்துள்ளனர்.

    கும்பகோணம் பகுதியில்  ஆசிரமம் நடத்த நிலம் வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பெண் சாமியார் கைது.

    திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் வசித்து வருபவர் பபிதா என்ற பவித்ரா. இவர் தனக்கு காளியின் பரிபூரண அருள்  கிடைத்துள்ளதாகவும் ஆகையால் பொதுமக்கள் தன்னிடம் ஆசீர்வாதம் பெற்று பயனடையுமாறு திண்டுக்கல்லில் விளம்பரம் செய்திருந்தார்.  இதேபோல்  தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நிகழ்ச்சிகளை நடத்தினார். இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    Also Read:  ஆபாசப்பேச்சு.. வீடியோ.. சிறைப்பறவைகளாக ரவுடி பேபி சூர்யா - சிக்கா

    இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தவயோகி என்ற ஆண் சாமியார் கும்பகோணம் பகுதியில் ஆசிரமம் அமைக்க வேண்டும் என்றும் அதற்கு நிலம் வாங்கி தர வேண்டும் என பவித்ராவிடம் கேட்டுள்ளார். அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்வதாகக் கூறி ரூபாய் 5,50,000 மற்றும்  60 சவரன் தங்க நகையை  பெற்றுள்ளார். ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் பவித்ரா நிலம் வாங்கித் தரவில்லை இதனையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிலக்கோட்டை காவல் நிலையத்தில் தவயோகி  நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பவித்திரா பணம் மற்றும் நகை மோசடி செய்ததாக புகார் அளித்தார்.

    Also Read: நடுரோட்டில் வழக்கறிஞரை வெட்டிக்கொன்ற கும்பல்.. ஆனேக்கல் பகுதியில் பரபரப்பு

    அந்த புகாரின் பேரில் நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பவித்ராவை தேடிவந்தனர். இந்நிலையில் பவித்ரா திண்டுக்கல் மேற்கு ஆரோக்கியமாதா தெருவில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக  நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனையடுத்து நேற்று திண்டுக்கல் வருகை தந்த நிலக்கோட்டை பவித்ரா மற்றும் அவரது தங்கை ரூபாவதி ஆகியோரை கைது செய்து நிலக்கோட்டைக்கு  அழைத்துச் சென்றனர்.   இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.

    செய்தியாளர் : சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Arrest, Crime | குற்றச் செய்திகள், Dindugal, Police

    அடுத்த செய்தி