Home /News /tamil-nadu /

கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் பள்ளி மாணவர்கள்.. பழனி பேருந்து நிலையம் அருகே பரபரப்பு

கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் பள்ளி மாணவர்கள்.. பழனி பேருந்து நிலையம் அருகே பரபரப்பு

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

Palani Students Attack: பள்ளி மாணவர்கள் பள்ளிமுடித்து வீடு திரும்பும் நேரத்தில் பேருந்து நிலையம் அருகே கும்பலாக கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

    பழனி பேருந்து நிலையம் அருகே நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மோதலில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

    தமிழகத்தில் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு ஈடாக உயர்த்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.  இதற்காகவே விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு அமைக்க தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. 

    இந்நிலையில் அரசுப்பள்ளி மாணவர்கள் ஒழுக்கமின்றி இருப்பது சிசிடிவி காட்சி  மூலம் வைரலாகி வருகிறது.  சமீபத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவன் குடிபோதையில் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த நிலையில் பழனி நகராட்சி பள்ளி மாணவர்கள் பேருந்து நிலையம் அருகே சண்டை போட்டுக் கொண்டது தற்போது வைரலாகி வருகிறது.



    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் பகுதியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளி மாணவர்கள் பள்ளிமுடித்து வீடு திரும்பும் நேரத்தில் பேருந்து நிலையம் அருகே கும்பலாக கண்மூடித்தனமாக தாக்கிக் கொள்ளும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  இது தற்போது வைரலாகி வருகிறது.



    மாணவர்கள் கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவது மட்டுமன்றி ஆசிரியர்களுக்கும் மாணவர்களை கண்டிக்க அரசு விதிவிலக்குகளை அரசு வழங்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

    செய்தியாளர் , அங்குபாபு நடராஜன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: School students, Viral

    அடுத்த செய்தி