Home /News /tamil-nadu /

மாயமான பிளஸ் டூ மாணவி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு -திண்டுக்கல்லில் அதிர்ச்சி

மாயமான பிளஸ் டூ மாணவி ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு -திண்டுக்கல்லில் அதிர்ச்சி

திண்டுக்கல்

திண்டுக்கல்

Dindugal: பள்ளி மாணவி மர்மச் சாவு திண்டுக்கல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்லில் பிளஸ் 2 மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் தோமையார்புரத்தை சேர்ந்தவர் சர்குணம். இவரது மகள்  திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். பள்ளிக்கூடத்திற்கும் வீட்டிற்கும் அதிகதூரம்  என்பதால் பள்ளி அருகே உள்ள பால கிருஷ்ணாபுரத்தில் வசித்துவரும் தனது மாமா நடராஜன் வீட்டில் தங்கி மாணவி  பள்ளிக் கூடத்திற்கு சென்று வந்துள்ளார். மேலும் நாள்தோறும் டியுசனுக்கும் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (24.02.22) மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி கெளரி வீட்டிற்கு திரும்பவில்லை.

    Also Read:  விஷப்பாம்பை வைத்து வித்தை.. கல்லா கட்டும் மூதாட்டி- தாம்பரத்தில் பரபரப்பு

    இதனையடுத்து மாமா நடராஜன் தந்தை சர்குணத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து சிறுமியை தேடி உள்ளனர் ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் பாலகிருஷ்ணாபுரம் அருகே உள்ள திருச்சி ரயில் தண்டவாளத்தில் மாணவி பிணமாக கிடந்தார். மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என பழனி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Also Read: கோவை பெண் குறித்து ஆபாசப் பதிவு- ரவுடி பேபி சூர்யா மீது பாய்ந்த குண்டர் சட்டம்

    மேலும் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பள்ளி மாணவி மர்மச் சாவு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Police, School student

    அடுத்த செய்தி