Home /News /tamil-nadu /

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்கள் சாலைவிபத்தில் பலியான சோகம்

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு சென்ற இளைஞர்கள் சாலைவிபத்தில் பலியான சோகம்

விபத்து

விபத்து

தீபாவளி விடுமுறைக்கு கொடைக்கானலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய போது கார் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    திண்டுக்கல் அருகே அசுர வேகத்தில் சென்றபோது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் பல அடி உயரத்தில் சென்ற மின்சார வயரில் தொங்கியபடி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மதுரை பெருங்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் காமராஜ் (வயது 20) மற்றும் அஜித் கண்ணன் (வயது 20) இருவர் இருவரும் நண்பர்கள்.  தீபாவளி விடுமுறையை நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக இருவரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  அங்கு விடுமுறை கழித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். நண்பர்கள் இருவரும் இருசக்கரவாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டி அருகே வேகமாக சென்றபோது எதிரே வந்த எஸ்யுவி வாகனம் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் காமராஜ் என்ற இளைஞர் தூக்கி வீசப்பட்ட சாலையின் குறுக்கே சென்றுக்கொண்டிருந்த மின்கம்பத்தில் தொங்கியபடி உயிரிழந்தார்.  மற்றொரு இளைஞரான அஜித் கண்ணன் சாலையில் விழுந்ததில் ரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களின் நண்பர்கள் விபத்தில் இருவரும் உயிரிழந்தைக்கண்டு சாலையில் கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்கச் செய்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த நிலக்கோட்டை காவல்நிலைய போலீஸார் விபத்தில் இறந்த இளைஞர்களின் உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் சிக்கிய கார்  மற்றும் இருசக்கர வாகனங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இளைஞர்களின் நண்பர்கள் மற்றும் கார் ஓட்டுனர் தர்மராஜ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சங்கர் (திண்டுக்கல்)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Accident, Death, Dindugal, Kodaikanal, Two Wheeler, Youth dead

    அடுத்த செய்தி