ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மெகா தடுப்பூசி முகாம் நடத்தும் நாட்களை மாற்ற வேண்டும் - தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு

மெகா தடுப்பூசி முகாம் நடத்தும் நாட்களை மாற்ற வேண்டும் - தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு

தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நிர்மலா

தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நிர்மலா

தடுப்பூசி பணிகளுக்கு கூடுதலாக தற்காலிக பயிற்சி பெற்ற செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கூடுதலாக செவிலியர்கள் நியமனம் செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் நிர்மலா திண்டுக்கல்லில் கேட்டுக் கொண்டார்.

  திண்டுக்கல்லில் நேற்று (18.11.21)  மாலை தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்,

  அப்போது அவர், பொது சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் கிராம சுகாதார செவிலியர்கள் நாள்தோறும் 10 முதல் 12 மணி நேரம் கிராமங்களில் வேலை பார்த்து வருகின்றனர். தாய் சிசு மரண விகிதம் குறைப்பு, பிறப்பு விகித குறைப்பு, மகப்பேறு உதவித் திட்டம், இணையதள பதிவு மற்றும் அனைத்து  அத்தியாவசிய பணிகளை செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றை குறைப்பதற்காக தமிழக அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக வாரம்தோறும் மெகா சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இதனை கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பு வரவேற்கிறது.

  வாரத்தில் தொடர்ந்து  ஆறு நாட்கள் வேலை பார்த்து வருகிறோம். இந்தச் சூழ்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மெகா சிறப்பு முகாம் நடத்துவதால், வாரம் முழுவதும் தொடர்ந்து வேலை பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  கிராமங்களில்  வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டு உள்ளனரா என ஆய்வு செய்வது அவர்களுக்கு தடுப்பூசி போடுவது போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருவதால் மகப்பேறு உதவித் திட்டம் பிறப்பு விகிதம் குறைப்பு தாய் சிசு மரண விகிதம் குறைப்பு போன்ற மற்ற பணிகள் பாதிக்கக்கூடிய  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  தடுப்பூசி சாதனையை அடைவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை பொறுப்பாக்குவதை தமிழக அரசு கைவிட வேண்டும்.  மேலும் சிறப்பாக செயல்படவில்லை எனக்கூறி ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். சேலம் மாவட்டத்தில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும்.

  தடுப்பூசி பணிகளுக்கு கூடுதலாக தற்காலிக பயிற்சி பெற்ற செவிலியர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களுக்கு பதவி உயர்வுக்கான நேர்காணலை கடந்த மே மாதம் இல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை நடத்தப்படவில்லை.

  Must Read : திரும்ப பெறப்பட்ட சென்னை, திருவள்ளூருக்கான ரெட் அலர்ட்

  ஆகவே பதவி உயர்வுக்கான நேர்காணலை தமிழக அரசு உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

  செய்தியாளர் - சங்கர், திண்டுக்கல்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Covid-19 vaccine, Nurse, Vaccination